பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடில் ம்ே 123

படுத்தும் பெரிய வலைகளே, கையால் திரிக்காது, பெரிய கதிர்களின் துணைகொண்டு திரித்த கயிற்றால் பின்னுவர். பின்னுங்கால் இடும் முடிகளேயும், எளிதில் அவிழ்ந்து போகாவாறு இறுக முடிவர். அவ்வாறு விழிப்பா யிருந்து, வன்மை வாய்ந்ததாகப் பின்னிய வலையும் ஒரோ வழி, கிழிந்து பாழாகிவிடும். எடுத்துச் சென்ற வலை பாழாகிவிடின், பரதவர் வறிதே மீளவேண்டியவராவர். அவர்கள் அத்தனே உழைப்பும் பாழாம். ஆதலின் ஒன்று பாழாயின், அங்கிலேயில் உதவவேண்டி, ஒன்றிற்கு மேற்பட்ட வ&லகளே உடன்கொண்டு செல்வர். வல் ஏற்றிச் செல்லும் தோணியை, இடிபோல் ஒலித்து, மலே போல் எழுந்துவிழும் அலேகள் அலேக்கழிக்காவா ஆறு, பரதவர் முன்னும் பின்னும், மேலும், கீழும் இருந்து, துடுப்பின் துணைகொண்டு செலுத்திச் செல்வர். அக் காட்சி, தம் மிக்க யானேயைப் பாகர், நாற்புறமும், கின்றும், மேலேறி ஊர்ந்தும் அடக்கி நடத்திச் செல்லும் காட்சியை நினைப்பூட்டிப், பரதவர் வாழ்வின் கடுமையைக் கண்ணெதிரில் காட்டும்.

‘ வடிக்கதிர் திரித்த வன்ஞாண் பெருவலே

இடிக்குரல் புணரிப் பெளவத்து இடுமார் கிறையப் பெய்த அம்பி காழோர் - சிறை யரும் களிற்றின் பரதவர் ஒய்யும்.’ 1

மீன் பிடிக்காது மீளார் : - கடலின் அமைதியையும், காற்றின் அடக்கத்தையும் நோக்கியிருந்து, கடவுளே வழிபட்டுக் கட்டுமரம் ஏறிச்

1. நற்றிணை : 74. உலோச்சஞர்.

வடிக்கதிர்-வடித்துச் செய்த கதிர். வன்ஞாண்-வலிய கயிற்றால் பின்னிய இடிக்குரல்-இடிபோன்ற அலையோசை. புணரி-அல. பெளவம்கடல், இடுமார்-இடுதற் பொருட்டு. காழோர்-யானைப் பாகர். சிறையரும்அடக்குதற்கு அரிய, களிற்றின்-யானையைச் செலுத்துவதுபோல், ஒய்யும்செலுத்தும், - -