பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 நற்றிணை

கொடுமுடி அவ்வலை பரியப் போகிய கோட்சுருக் குறித்த முன்பொடு வேட்டம் வாயாது எமர் வாரலர்.” 1

மீன் பிடித்த மகிழ்ச்சி :

மீன் வேட்டையில் வல்ல பரதவர், விசிய வலையை வலிதிற் பற்றி இழுத்தல், பகற் காலத்திலும் இரவுக் காலத்தில் எளிதாம் ; உடல் தளர்ச்சி உறுதலும் இன்றாம் ; மேலும், இரவில் விளக்கேற்றிச் செல்லின், அவ்விளக்கொளி கண்டு, மீன்கள் தம் படகை அணுகு தலும் செய்யும் ; ஆதலின் மீன் பிடித்தற்கு இரவுக் காலமே ஏற்ற காலமாம் என்பனவற்றை அறிந்திருக் தனர்; அவ்வறிவு வாய்க்கப் பெற்ற பரதவர் சிலர், இரவின் இடையாமத்தே கட்டுமரம் ஏறிச் சென்றனர். கடற் காற்று விசினும் அவியாத பெரிய திரிகொண்டு கொளுத்திய விளக்குகளே ஏற்றி வைத்துக் கொண்டனர் ; இரவில், மீன்களே வலே விசிப் பிடிப்பதினும், விளக்கொளி கண்டு வந்து, தம் தோணியை மொய்க்கும் மீன்களே, அவ்’ விளக்கின் நிழலில் மறைந்திருந்து, எறிவேல் எறிந்து பிடித்தலே கன்று என உணர்ந்து எறிவேல்களையும் எடுத்துக்கொண்டனர் ; வேலேறுண்ட மீன்கள், அவ் வேலோடு ஓடி விடுதலும் உண்டு ஆதலின், அவை அவ்வாறு ஓடிவிடாவாறு, அவ்வேல்களின் அடியை வலிய கயிற்றால் பிணித்துக் கொண்டனர். இத்தனே ஏற்பாடுகளோடும் புறப்பட்டுப் போன பரதவர், போன இடத்தில் எதிர் நோக்கியவாறே எண்ணற்ற பெருமீன் களப் பிடித்துக் கொண்டனர். வினை முடிந்துவிட்டமை யால், விடிவதற்குள் வந்து கரையேறினர் ; கொண்டு. - 1. நற்றின. 215. மதுரைக் கள்ளம் போதஞர். και ηr - கோட்சுரு-எதிர்த்த உயிர்களைக் கொன்று அழிக்கும் சுரு. முன்புஆற்றல். வாயாது. வெற்றி பெருது.