பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல் நிலம் 12?

வந்த மீன்களேக் கடற்கரையை அடுத்திருந்த சோலேயுள் குவித்தனர். அவற்றைக் காணக் காண, அவர்கள் மனம் மகிழ்ச்சியில் திாேத்தது. தம் இனத்தாரையெல் லாம் அழைத்தனர் , தம் வேட்டைப் பயனே அவர்க்கும் காட்டி, அவரோடும் கூடிக் கள்ளுண்டு களித்தனர்.

“ நோன்புரிக்

கயிறு கடையாத்த கடுநடை எறிஉளித் திண்திமில் பரதவர், ஒண்சுடர்க் கொளீஇ நடுநாள் வேட்டம் போகி; வைகறைக் கடல்மீன் தங்து, கானல் குவைஇ ஓங்கு இரும் புன்னே வரிகிழல் இருந்து தேம் கமழ் தேறல் கிளையொடு மாந்திப் பெரிய மகிழும்.” 1

மாலை வந்துற்றது ; காலேயில் கடல்மேல் சென்ற பரதவர் சிலர், அப்போது வந்து கரை ஏறினர் அவர்கள் வலை கொண்டு சென்றவர் ; பெரிய கடலைச் சேறு காணுமளவு கலக்குபவர்போல் வலைகளே வீசி விசி, மீன் களே வாரிக் குவித்தனர். தாம் ஏறிச் சென்ற படகும் நிறைந்து போகவே, வலே விசுவதை விடுத்து, வந்து கரை ஏறினர்; கொண்டுவந்த மீன் குவியலைக் கரையை அடுத்த சோலேவரை கொண்டு செல்லவும் அவர்களால் இயல வில்லை. அவர்கள் அவ்வளவு தளர்ச்சியுற்றிருந்தனர். அதல்ை அம்மீன்களே, அலே அலைக்கும் மணல் மேட்டி லேயே கொட்டிக் குவித்தனர். இரவும் வந்தது; இருள் பரவிவிட்டது. உடனே, கீழே சிதறிக் கிடக்கும் கிளிஞ்சில் களில் சிலவற்றைப் பொறுக்கி, அவற்றில் மீன் கொழுப்

நற்றிணை : 388. மதுரை மருதங்கிழார் மகளுர் பெருங்கண்ணனர்.

நோன்புரி-வன்மைமிக்க புரிகளால் ஆய. கடையாத்த - அடியில் கட்டிய கடுநடை-விரைந்து செல்லவல்ல. திண்திமில்-வலிய மீன்படகு கொளிஇ-கொளுத்திக்கொண்டு. கானல்-கடற்கரைச் சோலே. தேம்கமழ்தேன் மணம் வீசும். தேறல்-கள். கிளேயொடு-இனத்தாரோடு.