பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 நற்றிணை

பால் ஆகிய நெய் வார்த்து விளக்கேற்றி வைத்தனர். அதற்குமேல் அவர்களால் எதுவும் செய்ய இயலவில்லை. அவ்விளக்கின் ஒளியில், மீன் குவியலுக்கு அருகே, மணல் மீது வீழ்ந்து, தம்மை மறந்து உறங்கிவிட்டனர். அவர்கள் மேற்கொண்ட மீன்வேட்டைத் தொழில், அவர்கள் உள்ளத்திற்கு அளித்த அமைதி அத்துணப் பெரிது போலும் !

நெடுங்கட்ல் அலைத்த கொடுந்திமில் பரதவர் கொழுமீன் கொள்கை அழிமணல் குவைஇ மீன் நெய் அட்டிக் கிளிஞ்சில் பொத்திய சிறு தீ விளக்கில் துஞ்சும்.” 1

வலைஞர் குல இளைஞர் :

கடற்கரையில், பனே மரங்கள், வேலிபோல் வளர்ந் திருக்கும் ஒரு சிற்றுார் : அச்சிற்றுாரில் வாழும் பரதவ ருள், கொடிய சுரு மீன்களேயே தேடிப் பிடிக்கும் ஒருவன் இருந்தான் ; அதற்கேற்ற ஆற்றலும், உடற்கட்டும். உடையான் அவன் ; மக்கட் செல்வத்தையும், அவன் குறைவறப் பெற்றிருந்தான் ; அவன் சிறுவர்களும் அவனப்போலவே தொழில்விருப்பம் வாய்ந்தவர். தந்தை, கட்டுமரம் ஏறிச் செல்வதையும், அவன் ஏறிச் செல்லும் கட்டுமரம், ஊசல் ஆடுவதுபோல், உயர்ந்தும் தாழ்ந்தும் அலேகளில் ஆடிச் செல்லும் அழகையும், சென்ற தந்தை மீண்டு வருங்கால், பெரிய பெரிய மீன்களைப் பற்றி வருவ தையும் நாள்தோறும் கண்டுமகிழும் அவர்கள் உள்ளத் தில், தந்தையைப் போலவே தாமும் கட்டுமரம் ஏறிக் கடல்மேல் செல்லுதல் வேண்டும், கட்டுமரம், கடலில்

1. நற்றின. 175. - . . . . . . . . . . . . . . . . . . அல்லத்தவலே விசி மீன் பிடித்த, கெர்ழுமீன் கொள்கை-தாம் கொண்ட கொழத்த மீன்களை அட்டிவார்த்து. பொத்திய-ஏற்றிய துஞ்சும்-உறங்கும்.