பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல் நிலம் 129

ஆடி அசையும் அழகைக் கண்டு மகிழ்தல் வேண்டும் ; பெரிய மீன்களே நிறையப் பெற்று வ்ருதல் வேண்டும் எனும் ஆசைகள் அடுக்கடுக்காக எழுந்தன. இளமையின் அறியாமையும், அத்தொழிலிற் கொண்ட ஆர்வமும், அத் தொழில் எத்துணை அருமை வாய்ந்தது, கொடுமை உடையது என்பதை உணர்த்தில. அதனுல் ஒருநாட் காலே, தந்தை கடல்மேல் செல்லப் புறப்பட்டவுடனே, அவர்கள் அவன் கால்களேக் கட்டிக்கொண்டு தம்மையும் உடன்கொண்டு செல்லுமாறு வற்புறுத்தினர். செல்லும் இடத்தின் அல்லல் அறிந்த அவன், அவர் ஆசையை கிறைவேற்ற அஞ்சின்ை. அவர்களே அழைத்துச் செல்ல மறுத்தான். அதல்ை அவரைக் கரைக்கண் விடுத்துக் கட்டுமரம் ஏறிக், காக்கைகள் கூட்டங் கூட்டமாய்ப் பறக்கும் கடல்மேல் சென்றுவிட்டான். தந்தை மறுத்துச் செல்வதையும், செல்லும் தந்தையின் கட்டுமர அழகையும் காணக் காணக் கலக்கம் மிகுந்தது. கண்கள் நீரைக் கக்கின. அவர்கள் தேம்பித் தேம்பி அழுதனர். அவர்கள் அருகிருக்கும் தாய் எத்துணே ஆறுதல் கூறியும் அழுகை அடங்கவில்லை. அவர் அழுகையை வெறும் சொற்க களால் போக்க இயலாது என்பதை உணர்ந்தாள் தாய். அவர்களே விடுத்து விரைந்து சென்றாள் ; வேலிக்கண் நிற்கும் ரத்தினின்றும் பனங்காய்கள் சில பறித்தாள் : அவற்றை வெட்டி உள்ளிருக்கும் நுங்குகளேப் பெயர்த்து

- எடுத்தாள் ; துங்கோடு சிறுவர்கள் பால் சென்றாள் : அதற்குள், அவன் சென்ற கட்டுமரம் கண்ணிற்குப் புலப் படாது மறைந்துவிட்டது . அதைக் காளுமையால்,

தந்தையின் போக்கைச் சிறுவர்களும் ஒரு சிறிது மறக் தனர் ; அவர்கள் தேமலும் குறைந்தது ; அக்கிலேயில் ஆங்கு வந்த அவள் அவர்கள் கைநிறைய துங்குகளைக் கொடுத்தாள் : ஒரு சிலவற்றை அவர்கள் வாயிலும்