பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடு 18

படமாக்கிக் காட்டியுள்ளார் ஒரு புலவர். அக்காட்சியை

விேரும் கண்டு களியுங்கள் !

கிழங்கு கீழ் வீழ்ந்து, தேன்மேல் தூங்கிச் சிற்சில வித்திப் பற்பல விளைந்து தினகிளி கடியும் பெருங்கல் நாடு.1

பொன் பூக்கும் நாடு :

பொன் பொருள்களுள் சிறந்தது ; பொருள், பொன் எனும் பெயராலும் வழங்கப்பெறும் , மண்ணுசை, பொன் ைைச என வழங்குவது அறிக. பொருள்களுள் மிக்க மதிப்புடையது பொன் ; பொன், வெள்ளி, இரும்பு செம்பு முதலாம் மண்தரு செல்வங்களில், பொன் ஒளியும் உறுதிப்பாடும் உடையது ஆதலின், அது, மக்களால் பெரிதும் விரும்பப் பெறுகிறது. பொன்னே விரும்பாத ஆடவரையோ, மகளிரையோ காணல் அரிதினும் அரிதாம்; பொன்னல் ஆகாதது எதுவுமில்லை. மக்களே அழகுடையராக்கும் அணிவகைகளே ஆக்கப் பயன் படுவது பொன். அதனல், பொன்னிற்குத் தேவை மிகுதியாயிற்று. அப்பொன்னே எப்பொருள் தந்தேனும் பெறுதல் வேண்டும் என்பதில் நாடுகள் பேரார்வம் காட்டின. தம் நாட்டில் உண்டாம் உணவு உடை முதலாம் பொருள்களைத் தந்து, பொன்னப் பெற்றன. அவ்வாறு பொருள் தந்து பொன்னேப் பெற்ற நாடுகள் சிறந்து விளங்கின. அகில், மிளகு, ஆரம் முதலாம் பொருள்களோடு தமிழகத்தினின்றும் சென்று, பொன் ைேடு திரும்பிய கப்பல்கள் கணக்கில : யவனர் தந்த

1. நற்றிணை 328. தொல்கபிலர் ‘. . .

கீழ்வீழ்ந்து-கீழ் இறங்கி மண்ணுக்கடியில் விளைந்து. மேல்துங்கி. மலையிலும் மரத்திலும் மேலே தொங்கி, வித்தி-விதைத்து. கடியும். ஒட்டும். பெருங்கல்-பெரியமலை, - .