பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 நற்றிணை

திணித்தாள். துங்கைத் தின்று சுவைத்த அவர்கள் அச்சுவை மிகுதியால் தந்தையின் போக்கை அறவே மறந்தனர். நுங்குத் தின்பதில் மகிழ்ந்து போயினர் ; இகளஞர்களின் தொழிலார்வம் போற்றுவதற் குரிய தன்றாே !

கடுஞ்சுரு எறிந்த கொடுங்தாள் தங்தை புள் இமிழ் பெருங்கடல் கொள்ளான் சென்றென மனஅழு தொழிந்த புன்தலைச் சிருஅர் துனையதின் முயன்ற தீங்கண் நுங்கின் பணகொள் வெம்முலே பாடுபெற்று உவக்கும் பெண்ணை வேலி உழைகண் சீறுார்.” 1

வருதிமில் எண்ணும் பரதவர் மகளிர் :

பெற்ற மக்களுள் ஆண்பாலார், தந்தையையும், பெண்பாலார் தாயையும் ஒத்திருப்பர் ; இவ்வுண்மை பரதவர் குலத்தார்க்கும் பொருந்தும். தந்தை கடல்மேல் சென்று மீன்பிடித்து வருதலைக் காணும் அவன் இளைஞர், தந்தையைப்போல், தாமும் கடல்மேல் சென்று மீன் பிடித்து வாழ விரும்புவர். ஆனல் அவன் மகளிர், தம் தந்தை தொழிலே விரும்பார் : தாயின் தொழிலேயே விரும்புவர். - -

கணவன் கடல்மேல் சென்ற காலத்தில், மனைவி மனேக்கண் இருந்து, பகலெல்லாம் மீன் உலர்த்தலும், அதை விற்று வருதலும் செய்துவிட்டு, மாலையானதும், கடற்கரைக்குச் சென்று, மீன் பிடித்துத் திரும்பும் கணவனே எதிர்நோக்கியிருப்பள் ; அவன் கட்டுமரம்

1. நற்றிணை :392. மதுரை மருதன் இளநாகனர். - “. கொடுந்தாள்-பெரியமுயற்சி. புள்-பறவை. இமிழ்-ஒலிக்கும். கொள் ளான்-கொண்டுசெல்லது. துனையதின்-விரைவாக. தீங்கண்-இனியtர். உள்ளகண், பாடு-பயன, பெண்ணே.னே, உழைகண்-அகன்ற இடம்.