பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல் நிலம் 131

கண்ணிற்குப் புலப்படுகிறதா எனக் கவலையோடு காத் திருப்பாள் ; அவன் தோணி தொலைவில் வரக் கண்ட வுடனே, “ அவர் வந்துவிட்டார் ; அதோ அவர் திமில்” என உரக்கக் கூவி உள்ளம் மகிழ்வாள்.

தர்யின் இச்செயல்களே நாள்தோறும் கண்டு பழகிய அம்மகளிரும் அதுவே செய்வர். பகலெல்லாம், உப்பிட்டு உலர்த்திய மீன்களே உண்ணவரும் பறவைகளே ஒட்டிக் காவல் புரிவர் ; மாலை வந்ததும் கடற்கரைக்குச் செல்வர். தொலைவில் வரும் தோணிகளைக் காணுமாறு கரையில் மலைபோல் குவித்திருக்கும் உப்புக் குவியல்கள்மீது, குவிய லுக்கு ஒருவராக ஏறி எதிர்பார்த்திருப்பர். தோணிகள் கண்ணிற்குப் புலப்படத் தொடங்கியவுடனே, “ அதேச என் தந்தை தோணி ! இதோ உன் தந்தை தோணி !” எனக் கூறி வரும் தோணிகளே எண்ணிப் பார்த்து இறு மாந்து மகிழ்வர்.

‘’ புலவுமீன் உணங்கல் படுபுள் ஒப்பி

மடகோக்கு ஆயமொடு உடன் உப்பு ஏறி எங்தை திமில்இது நுங்தை திமில் என விளைநீர் வேட்டம் போகிய கிளைஞர் வண்திமில் எண்ணும்.” 2


1. நற்றினே : 381. உலோச்சஞர். - . . உணங்கல்-கருவாடு. படுபுள்-உண்ணவரும் பறவை. ஒப்பி-ஒட்டி. ஆபம்-தோழியர். திமில்-படகு, வளைநீர்-உலகை வளைத்துக் கிடக்கும் கடல்.