பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கடமைநெறி நிற்கும் கணவன்

டுேது ருமையும் உரனும் ஆடுஉ மேன என்றார் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைக்கு வரம்பு வகுத்த ஆசிரியர் தொல்காப்பியர்ை. பெருமையாவது, செயற் கரிய செய்தல்; செயற்கு அரிய செய்வார் பெரியர் ‘ என்பது திருக்குறள். செயற்கு அரியவாவன, மனமொழி மெய்கள் துரயவதால், நல்லனவே சிந்தித்தல், நல்லனவே சொல்லுதல், நல்லனவே செய்தல். செயற்கரிய செய்து பெரியோராதல், அம்மனமொழிமெய்கள், அவ்வாறு நல்லனவற்றின்கண் செல்லாது, அல்லனவற்றின் கண் செல்லுமாயின், அவற்றை அவ்வல்லனவற்றின் நீக்கி நல்லனவற்றின் கண் நிற்கச் செய்யும் அறிவுடையார்க்கே இயலும்; தக்க இன்ன தகாதன இன்ன என்று உணர்ந்து அம்மனமொழி மெய்களே, அவை சென்ற விடத்தால் செலவிடாது, தீதுஒரீஇ நன்றின் பால் உய்க்கும் ஆற்றல் உடைமையால், அவ்வறிவை உரன் எனும் பெயரிட்டு வழங்கினர் தொல்காப்பினர்.” உரன் எனும் தோட்டியான்