பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடமைநெறி நிற்கும் கணவன் 133

ஒர் ஐந்தும் காப்பான் “ என்ற விடத்தும் உரன் எனும் அச்சொல், இது ஒரீஇ நன்றின்பால் உய்க்கும் நல்லறிவு எனும் பொருளே உடையதாதல் அறிக. ஆகவே ஆடவர் எனப்படுவார், மன மொழி மெய்களால் துயராதலோடு அவர்க்கு அத்துாய்மையாவது யாது என அறிவித்து, அவரை அந்நெறிக்கண் நிறுத்தும் நல்லறிவும் உடைய ராதல் வேண்டும் என்பது, தொல்காப்பியர் போன்ற பெரியோர்கள் கருத்தாதல் புலம்ை.

ஆடவர். அப்பெருமையும் உரனும் கொண்டு வாழின், உலகம் வாழும். அவர் அவற்றை மறந்து சிறுமையும் சிறுமதியும் கொள்வராயின் உலகம் கேடுறும் ; ‘ பண் புடையார்ப் பட்டுண்டு உலகம்; அதுவின்றேல், மண்புக்கு மாய்வது மன் ” என்றார் வள்ளுவர். தமக்கு ஒதிய அவ்வறவழியை மறந்து, அழிவழியிற் செல்வதால், புருடரே புலேயர் ; கிலேயிலாப் பதடிகள் ; இருளடை நெஞ்சினர், ஈரம் இல் உளத்தர் ஆனே அவர்க்கு வினுரை: தங்கயமன்றிப் பின்னென்றறியாக் காதகர்; கடையர்; புருடரோ இவரும் கருவுறும் குழவிமெய் மென்றிட நன்று எனக் கொன்று தின்றிடுவர் அவர் அவாவிற்கு அளவில்லை; அன்போ அறியார் மணமும் அவர்க்கு ஒரு வாணிகம்’ எனப் பெரியோர்களால் பல்லாற்றானும் பழிக்கப் பெறும் இக்கால ஆடவர் போலாது. சங்க காலத்துத் தமிழ் ஆடவர். பெருமையும் உரனும் பெற்றுப் பெரியோராய் வாழ்ந்தனர்; அவ்வாடவர் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை நெறிகள், நாகரிக வாழ்வை கணிமிகப் பெற்றவர் எனத் தம்மைப் பெருமை பாராட்டிக் கெ ாள்ளும் இன்றைய ஆடவர்க்கு வழித்துணேயாகுக என விரும்பி, அப்பழந் தமிழ் ஆடவர் சிலரைக் கண்டு அறிவு. பெறுவோமாக. .