பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 - நற்றிணை

பண்புகட்கும் கிலேக்களயை சான்றாண்மை உடையவன் ; மலேகலங்கினும் கிலேகலங்கா நீதி நெறி நிற்பவன் ‘ என்றெல்லாம் கூறிப் பாராட்டியுள்ளாள் அப் பெண்; பெண்டிரும் பாராட்டும் பெருந்தகையாளர் அக்கால ஆடவர் என அறிய அகம் மகிழ்கிறது எம் உள்ளம் !

‘ அளிய பெரிய கேண்மை நும்போல்

சால்பு எதிர்கொண்ட செம்மையோர்.’

அருள் உள்ளம் :

தாய், தந்தை, தன்னுடன் பிறந்தார், மனேவி மக்கள். அவர்களேச் சூழ்ந்து நிற்கும் சுற்றத்தார் என்ற இவர் களிடத்தே காட்டும் பற்று அன்பு எனப்படும் , அவ்வன் பு வேண்டப் படுவதேயாயினும், அது யாதோ ஒரு வகையில் தன்னோடு தொடர்புடையார்பால் செல்வதால், அது தன்னலம் உடையதாகி விடுகிறது. அவ்வன்பே தன்ளுேடு எவ்வகையிலும் தொடர்பற்ற பிற உயிர்கள்பால் தோன்றுமாயின், அங்கிலேயில் அது சிறந்ததாம். தொடர்பற்றவர்பால் தோன்றும் அவ்வன்பை, அருள் என்று பெயரிட்டு அழைப்பர் பெரியோர். தன்னிலும் கிலேயில் தாழ்ந்த, தன்னினும் ஆற்றலில் குறைந்த, தன்னினும் வாழும் வாய்ப்பிழந்து போன உயிர்களின் துயர் நிலைகண்டு, கண்ணில் நீர்மல்கக் கலங்கி நின்று, அவற்றின் துயர் துடைத்து வாழும் வாழ்வு பண்பட்ட வாழ்வாம். அத்தகைய அருள் உடையார் வாழ்வதி ஞலேயே உலகம் வாழ்கிறது. இவ்வரும் பெருங் குணத்தைக் குறைவறப் பெற்றிருந்தனர் அக்கால

1. நற்றிணை-345. நம்பிகுட்டுவனுர். -

அளிய-அருள் உடைய, கேண்மை-நட்பு. சால்பு-சான்றாேtக்குரிய பண்புகள், எதிர்கொண்ட-விரும்பி மேற்கொண்ட, செம்மையோர்-நடு. கிலேமை உடையோர். .."