பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 நற்றிணை

புகழிலா வாழ்வு வாழ்வாகாது. அவ்வாழ்வு விலங்கு வாழ்வினும் இழிவுடைத்து. “ தோன்றின் புகழொடு தோன்றுக’ என்றார் வள்ளுவர். புகழ், பல வழிகளில் வரும் என்றாலும், அவற்றுள் வறுமையால் வாடி வந்து நிற்பாருக்கு வாரிவ்ழங்கி, அவர் வாட்டம் தவிர்த்து வாழவைப்பதால் வரும் புகழ் போல் விழுமியது வேறு இல்லை. ஆகவே, மக்கள் கொடைக் குணம் வாய்க்கப் பெற்றுக் குன்றாப்புகழ் உடையதாதல் வேண்டும். அதுவே, அவர் வாழ்வின் குறிக்கோளாதலும் வேண்டும். ஈதல் இசைபட வாழ்தல், அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு வருந்தி வருவார்க்கு வழங்க மாட்டாது, வறிதேவாழ்வதினும், வாழ்விழந்து மாண்டு மடிதலே மாண்புடைத்து : “ ஈதல் இரந்தார்க்கு ஒன்று ஆற்றாது வாழ்தலின் சாதலும் கூடும் ” என்றான் ஒர் ஆண் மகன். “ சாதலின் இன்னதது இல்லை ; இனிது அது உம், ஈதல் இயையாக் கடை “ என்றார் வள்ளுவர். பழந்தமிழ் ஆடவர் வறுமையால் வருந்தித் தம்விடு நோக்கி வரு’ வாரின் வாட்டம்போக்கி, வாழ்வளித்து வாழத்தெரிந்தவர்; வருவோரின் வாட்டத்தைப் போக்காது வாழும் வகை தெரியாதவர். தன் கணவன் தன்னைத் தனித்திருக்க விடுத்துப் பொருள் தேடிவரப் போகிருன் என்பது உணர்ந்து, அவனேப் பிரிந்து எவ்வாறு வாழ்வது என வருந்தினுள் ஒரு பெண் ; அப்போது ஆங்கு வந்த அவள் தோழி, கணவரைப் போகவிடுத்து வருந்தி வாழ்வதை விடப் போகாவாறே தடுத்து விடுதல் நல்லதன்றாே ?” என்று கூறினுள். அது கேட்ட அப்பெண், தோழி அது என்னுல் இயலாது ; உன்னலும் அது இயலாது ‘ கணவர், வறியார்க்கு வழங்காது வாழும் வாழ்வின் வளம் அறியாதவர் ; அத்தகைய அவர், கம் வாயிற்கண் வந்து இரத்து நிற்கும் இரவலர்க்கு இல்லையென்னது தருதற்குத்