பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடமைநெறி நிற்கும் கணவன் 189

துணை செய்யவல்ல பொருளே ஈட்டிவரப் போகாது இரார் ; ஆதலின் அவரைப் போகவிடுத்து வருந்தி யிருப்பதல்லது, போகவிடாதே தடுத்து நிறுத்துதல் இயலாது ‘ என்று கூறி, அக்கால ஆடவரின் கொடைக் குணத்தைக் குன்றிலிட்ட விளக்கென்க் காட்டியுள்ளாள்.

‘ ஏகுவர் என்ப தாமே ; தம்வயின்

இரங்தோர் மாற்றல் ஆற்றா இல்லின் வாழ்க்கை வல்லா தோரே.” 1

விருத்தோம்பல் :

ஊருக்கு வரும் புதியவர்களுக்குக் காசு பெற்றா பினும் உணவளித்துத் துணைபுரியம் உணவில்லங்கள் இல்லாக் காலம் அக்காலம். அதனல், தம்மூர்க்கு வரும் புதியவர் களுக்கு உணவளிக்கும் உயர்ந்த தொண்டினே, அவ்வூரில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் கடமையாக மேற்கொண் டிருந்தது. விருந்தோம்பும் வாழ்க்கையை வற்புறுத்தினர் *அக்கால ஆன்றாேர்கள். ‘ இருந்து ஒம்பி இல்வாழ்வ தெல்லாம், விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு ‘ என இல்வாழ்வது, வருவிருந்தோம்பும் வாழ்க்கைக்கே என்றார் வள்ளுவர். விருந்தோம்பி வாழும் வாழ்க்கையை, அக்கால ஆடவர் விரும்பி மேற்கொண் டிருந்தனர் தன் மனேவி, பாராட்டத்தக்க் பண்புகள் பல பெற்றிருப்பவும், ஒர் ஆண்மகன், அவள் பால் அமைக் துள்ள விருந்தோம்பி வாழும் வனப்பையே வியந்து பாராட்டி யுள்ளான். விருந்தினர், இரவில் - உண்னும் பொழுது கழிந்த இடையாமத்தில் - வரினும், விருந்தினர் வருகையறிந்து, அகமும் முகமும் மலர வரவேற்று, அவர்

1, நற்றினே : 84. r . . ; - ஏகுவர்-செல்வர். தம்வயன்-தம்மிடத்தில், மாற்றல் ஆற்று.அவர் துன்பத்தைப் போக்கமாட்டாத வல்லாதோர்-வாழத் தெரியாதவர்.