பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 நற்றிணை

விரும்பும் உணவு வகைகளே விரைவில் ஆக்கிமுடித்து, அன்புரை வழங்கிக்கொண்டே உண்பிக்கும் உயர்ந்த பண்பாடுடையவள் என் மனேவி எனத் தன் மனேவியின் விருந்தோம்பற் சிறப்பினேக் காணும் ஆர்வம் உந்த, விரைந்து வினைமுடித்து மீளும் அக்கால ஆடவரின் விருந்தோம்பற் சிறப்பின வியந்து பாராட்டுவோமாக.

“ அல்லில் ஆயினும், விருந்துவரின் உவக்கும்

முல்லே சான்ற கற்பின் மெல்லியல் குறுமகள் உறைவின் ஊரே.” 1

பிறர்க்கென வாழ்தல் :

“ நான், என்னுடையது ‘ எனக் கருதி வாழ்வதி ேைலயே, நாட்டில் பகைவளர்ந்து, பாழ், இடம்பெறு கிறது. உலகில் வாழ்வார் அனைவருமே அத்தகையராய் விடின், உலகம் என்றே அழிந்திருக்கும் அது அழியாது இன்று வரை கிலேபெற்றிருத்தல், அம்மக்களிடையே, தம்மை மறந்து, தம் நலத்தை மறந்து, பிறர் நலமேகருதி வாழும் பெரியோர் சிலர், அவ்வப்போது தோன்றி, அறநெறி காட்டி வாழ்ந்தமையினலேயே யாகும். நாடாளும் அரசனுமாய் நல்லறிவு கொளுத்தும் புலவனு மாய் வாழ்ந்த கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி எனும் பாண்டிய மன்னன், செய்யும் பணி எதையும், ஈட்டும் பொருள் எதையும் தமக்கோ, தம்மொடு உறவுடை யார்க்கோ பயன்தாற்பொருட்டு மேற்கொள்ளாது, தம் மோடு எவ்விதத் தொடர்பும் இல்லாத பிறவுயிர்களின் நலமே கருதி மேற்கொள்ளும் பெரியோரே, உலகை உயிர் Tepp%T : 148.gi.T – அல்லில்-இராக்காலம், உவக்கும்-உள்ளம் மகிழும். முல்லை-கற்பு நெறி. கணவன் கூறிய சொற்படி கடனுற்றும் ஒழுக்கம். சான்றபொருந்த மெல்இயல்-மென்மை வாய்ந்த சாயல். - -