பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடமைநெறி நிற்கும் கணவன் 141

வாழச் செய்யும் உயர்ந்தோர்களுள் சிறந்தவராவர் என்று கூறுகிறார். உண்டால் அம்ம! இவ்வுலகம்...தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுகர் உண்மை யானே. ” அவர் கூறும் அந் நெறி கின்று வாழ்ந்த பெரியோன், தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்,’ “ பிறர்க்கு அறம் முயலும் பெரியோன் ‘, தன் உயிர்க்கு இரங்கான் பிறஉயிர் ஒம்பும் மன்னுயிர் முதல்வன் ‘ என்றெல்லாம் பாராட்டப் பெறுவன். இவ்வுயர்ந்த உண்மையை உணர்ந்து, அவ்வழி கின்றவன் பழந்தமிழ் ஆண்மகன். அத்தகையான் ஒருவனேக் கணவகைக் கைப்பிடித்த காரிகையொருத்தி, ! யாம் பெற்ற இவ் வின்பம் பெறுக இவ்வையகம்’, ‘ நாடெலாம் வாழக் கேடொன்றும் இல்லே ‘ எனும் பரந்தவுள்ளம் உடைமை யால், உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்தும் ஒருங்கே வாழவேண்டும் எனும் அருள் உள்ளம் வாய்க்கப் பெற்று, அவ்வுயிர்களே அவ்வாறு வாழவைக்கும் வல்லமை வாய்ந்தது பொருள் என அறிந்து, அப்பொருளே, அவ் வுயிர்களுக்காக, அவை வேண்டுமளவு முயன்று தேடும் தாளாண்மையுடையவர் எம் கணவர் ‘ எனப் புகழ்ந்து அக்கால ஆடவர்களின், அருளால் அகன்ற உள்ளத்தை நாம் அறியக் காட்டியுள்ளாள். -

“ பிறர்க்கு என முயலும் பேரருள் நெஞ்சமொடு

காமர் பொருட்பிணி போகிய காம எம் காதலர் சென்ற ஆறே.” 1

வாய்மை : -

அறநூல் பல அறிந்து திருக்குறளே ஆக்கியவர் வள்ளுவர் ; அவர் கூறுகிறர்: தாம் அறிந்த அற நூல்கள் T TT :T86,

காமர்-அழகிய பொருட்பிணி-பொருளாசையால். போகிய-போன. காம ஆறு-அச்சம் பொருந்திய வழி. காதலர் சென்ற காம ஆறு.