பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 நற்றிணை

எதிலும், வாய்மை வழங்குதலேக் காட்டிலும், அஃதாவது உண்மை உரைத்தலேக் காட்டிலும் சிறப்புடைய அறம் வேறு இருப்பதாகக் கூறப்படவில்லை என்று யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற.” அத்துணேச் சிறந்தது உண்மையுரைத்தல். செய்ததைக் கூறுவது, செய்யப் போவதைக் கூறுவது உண்மையெனப்படும் , அதுவே வாயின் தன்மையாதல் வேண்டும் ; அதனுலேயே உண்மைக்கு, வாய்மை எனும் ஒரு பெயரிட்டு வழங்கினர் பெரியோர். உண்மையே உரைப்பதும், உரைத்தது பொய்த்துப் போகாவாறு நடத்தலும் கல்லோர்க்கு இயல்பாதல் வேண்டும். இந்தப் பண்பும், பழந்தமிழ் ஆடவரிடத்தில் அமைந்திருந்தது. செர்ன்ன சொல்லக் காத்து, அதன் வழியில் நிற்பதால், தன்வாழ்வே பாழா யினும், தான் வாழும், ஊரும் காடும் ஒருங்கே அழியினும், ஏன் உலகமே அழியினும், அச்சொல் பிழைபடவாழார் அவ்வாடவர். அவர்கள், அவ்வாறு வாய்மை வழுவாது வாழ்ந்தமையால், அவர்கள், ! உலகில் தன் கடமையில் ஒரு சிறிதும் வழுவாது, விளங்கும் ஞாயிறு அனேயர் ‘ எனப் பாராட்டப் பெறுதலோடு, அஞ்ஞாயிறேபோல் உலக மக்களால் வணங்கி வழிப வும் பட்டனர். உள்ளத் தால் பொய்யாது ஒழுகின், உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் ‘ என்ற வள்ளுவர் உரை, உண்மையுரை யாமன்றே பழந்தமிழ்ப் பெண்ணுெருத்தியின் தோழியாம் தகுதிவாய்ந்த ஒரு பெண், என் தலைவியின் கணவனும் தகுதிவாய்ந்த அவ்வாண்மகன், உலகமே நிலகலங்கினும், உரைத்த உரையைப் பொய்யாக்கா உள்ள உரம் உடைய வன்; அலைவீசும் ஆழ்கடலிடையே, உலகத்தார் கொழத் தோன்றும் ஞாயிறுபோல் வாய்மையில் வழுவாதவன் : அதல்ை வணங்கத் தக்கவனுமாவன் ‘ எனக் கூறிப்