பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடமைநெறி நிற்கும் கணவன் 145

ஒழுக்கக் கேட்டினே அவள் உணர்ந்து விடுவள் என்பதை அறிந்தவுடனே அஞ்சின்ை. அஞ்சிய அவன் கிலேயினத் தன் தோழியிடம் கூறி எள்ளி நகைத்தாள் அப்பரத்தை. அவ்வாறு நகைக்கு முகத்தான், அவன் ஒழுக்கத்தின் உயர்வை, ஒழுக்கத்தில் இழுக்கினமை கண்டு கலங்கும் அவன் உள்ளச் சிறப்பினே உலகிற்கு உணர்த்திள்ை.

‘ உள்ளுதொறும் நகுவேன் தோழி !...ஊரன்

தேம்கமழ் ஐம்பால் பற்றி, என்வயின் வான்கோல் எல்வளை வெளவிய பூசல் சினவிய முகத்துச் சினவாது சென்று, கின் மனையோட்கு உரைப்பல் என்றலின்,...முழவின் மண்ணுர் கண்ணின் அதிரும் கன்னராளன் நடுங்கு அஞர் கிலேயே.1

காதல் :

கூடி வாழும் இயல்புடையவர் மக்கள். அம் மக்களேப் பிற உயிர்களினின்றும் பிரித்துப் பெருமை செய்வதற்குக் காரணமாவது, கூடி வாழும் அவ்வியல்பே. மக்களே அவ் வாறு ஒன்றுகூட்டி வாழவைப்பது அன்பு. அன்பு பல்வேறு தொடர்புகளில் தோன்றும ; பெற்றாேர்க்கும் மக்களுக்கு மிடையே நிலவும் அன்பு ; ஆண்டவனுக்கும் அடிமைக்குமிடையே நிலவும் அன்பு ; நண்பர்களிடையே நிலவும் அன்பு எனத்தொடர்பால் அது பலவகைப்படும்.

1, நற்றிணை 100. பரணர். உள்ளுதொறும்-நினைக்குந்தோறும். ஊரன்-மருதநிலத்து ஊருக்கு உரிய தலவன், தேம் கமழ் ஐம்பால்-எண்ணெய் மணம் வீசும் ஜவ்வகை யாகப் பின்னப்பட்ட கூந்தல், என்வயின்-என்னிடம். வான்கோல்-சிறந்த வேலைப்பாடமைந்த, எல்வளை-ஒளிவீசும் கைவளை. வெளவிய பூசல்வளைகழலுமாறு பிரிந்து செய்த துயரம். மண் ஆர் கண் - மண்பூசப் பெறும் முழவின் தோல், அளுர்-துன்பம்,