பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 நற்றின.

நிற்கும் கிலேயற்று, இயங்கும் இயல்பினவாயுகோள்கள், தத்தம் நிலையிற் பிறழாது கின்றே இயங்குதல், பிறிதொரு பொருளேத் தம்பால் ஈர்க்கும் அவற்றின் ஈர்ப்பு ஆற்றலால் ஆதல் போல், இனத்தால், நிறத்தால் இன்னபிற வகையால் பல நிறப்பட்ட மக்கள், ஒன்று கலந்து வாழ்வது, அவர்களிடையே, முற்கூறிய பல்வேறு தொடர்பு குறித்துத் தோன்றி விளங்கும் அன்பின் ஆற்றலால் என அறிக. அப்பலரையும் ஒன்றுபடுத்துவது, அவ் வேற்றுமையுள் ஒற்றுமை காண்பது, அன்பு.

அன்பு எல்லோரிடத்திலும் உளது என்றாலும், அது ஒத்த சிறப்புடையதாதல் இல்லை. பெற்றாேர் தம்மக்க ளிடம் காட்டுமளவு அன்பை, அம்மக்கள் அப்பெற்றாே ரிடத்துக் காட்டுவதில்லை. பெற்றாேர் காட்டும் அன்பு பெரிதாம் ; தாயினும் சிறந்த தயாபரன்; பால் கினேந்து ஊட்டும் தாயினும் சாலப்பரிந்து ‘ என அத் தாயின் அன்பு, இறைவன் அன்பினும் சிறந்தது எனும் பொருள்படப் பாடிப் பாராட்டியுள்ளனர் பெரியோர். மக்கள் காட்டும் அன்பு, அளவால், தன்மையால் அப் பெற்றாேர் அன்பினும் குறைந்தே தோன்றும். ஆண்டா னுக்கும் அடிமைக்கும், நண்பர் இருவர்க்கும் இடையே தோன்றும் அன்பும் அத்தகையதே ஆல்ை கணவன் மனேவியர்க்கிடையேதோன்றும் அன்பு அத்தகையதன்று: கணவன் தன் மனேவியிடத்துக் காட்டும் அன்பினும், மனேவி தன் கணவனிடத்துக்காட்டும் அன்பு மிகுவதோ குறைவதோ இல்லை. அவ் அன்பு ஒத்த பண்புடைய தாகும் ; அகனலேயே கணவனேயும் மனேவியையும் பற்றிப் பாக்கள் பலபுனேந்து பாராட்ட முன் வந்த பழந்தமிழ்ப் பெரியார்களெல்லாரும், ஒத்த கணவனும் ஒத்த மனேவியும் என ஒருமைப்பாட்டினே விதந்து கூறிச் சென்றனர். அவ்விருவரிடையே உண்டாம் அன்பில் ஒருமைப்பாடு