பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடமைநெறி நிற்கும் கணவன் 14?

இன்றேல், அவர்கள் உண்மைக் கணவனும் மனேவியு மாதல் இல்லை. -

அவ்வாறு கணவன் மனேவியர்க்கிடையே தோன்றி ஒத்த இயல்புடையதாகும் உயர்ந்த அன்பையே பெரியோர்கள் காதல் எனும் கவின் மிகு பெயரிட்டு அழைத்தனர். அக்காதலும் இயற்கையானதாதல் . வேண்டும்; தானே தோன்றித் தன்னளவிலேயே வளர்ந்த தாதல் வேண்டும் , அவ்விருவரிடையே, அக்காதலேப் பிறர் கொண்டு வந்து புகுத்துதல் கூடாது ; கூடாது என்பது மட்டுமன்று ; அது இயலவும் இயலாது. இரும்பும் காந்தமும் பொருந்தும் தன்மைபோல் இருவர் சிந்தையும் இயல்பாய் உருகி, ஒன்றாம் தன்மையாதலே காதலல்லது, அக்காதல் ஒருவரால் ஆக்கப்படுதல் ஆகுமோ ?

காதலின் இவ்வுண்மையியல்பை உணர்ந்தவன் ,அக்கால ஆண்மகன். தான் விரும்பும் பெண்ணிற்கும் தன்பால் விருப்பம் உண்டாதல் வேண்டும் , அவ்வாறு த்ன்ன விரும்பாத ஒரு பெண்ண, அவள்பால் தனக்கு விருப்பம் உண்டாகி விட்டமையினலேயே வற்புறுத்தி மணந்துகொள்ளும் மணமுறையினே அவன் அறியான். தான் விரும்பும் ஒரு பெண், தன்னே விரும்பி மணந்து கொள்ளும்வரை பொறுத்திருக்கும் பேராண்மை உடை பவன். தன்னிடத்தில் அவளுக்கும் காதல் உணர்ச்சி உண்டாமாறு, அவள்பால் பலமுறை சென்று. அவள் விரும்பும் செயல்களே அவள் ஏவா முன்பே செய்து, அவள் பின்னல் திரிந்து, அவளேப் பணிந்து நிற்பன். அம்மட்டோ? அவள் காதலைப் பெறவேண்டின், அவள் தோழியின் துணைவேண்டும் என்பதை அறிவனுயின், அத்தோழியைப் பலமுறை சென்றுகண்டு, பணிந்து