பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 நற்றிணை குறைகூறி நிற்கவும், அவள் அருளேப் பெறவும் அஞ்சாது அவன் காதல் உள்ளம்.

அழகிய ஒரு மாளிகை , அம்மாளிகையின் முன் புறத்தே கிற்கும் நெடிய அழகிய தேர், அம்மாளிகை வாழ்வாரின் செல்வச் சிறப்பை உணர்த்துவதாய் இருந்தது. மனக்கவலே யற்று மகிழ்ந்து வாழும் அவர் இன்ப வாழ்வினே எடுத்துக்காட்டுமாறு பரந்துகிடந்தது நிலவொளிபோலும் வெண்மணல், அம் மணற் பரப்பில் தன் தோழியோடு பந்தாடிக்கொண்டிருந்தாள் ஒரு பெண். அவர்கள் ஆடிக்கொண்டிருக்குங்கால் ஆங்குவந்த ஒர் ஆண்தகை, செல்வச் சிறப்புத் தோன்ற கிற்கும் அம் மாளிகையையும், தோழியர் பலர்சூழ ஆடிக்கொண் டிரு கும் அப்பெண்ணேயும் கண்டான் ; அவள்பால் காதல் கொண்டான் ; எவ்வாருயினும் அவளேயே தன் மனேவியாக்கிக் கொள்ளுதல்வேண்டும் எனக்கருதினுன், ஆல்ை, அவனேயோ, அவன் காதலையோ கருதாது, தன் ஆட்டத்திலேயே கருத்தாயிருக்தாள் அப்பெண். அதனுல் . அவனேப் பொருட்படுத்தாதே, தன் ஆடல் முடிந்ததும் மனே குந்து மறைந்து விட்டாள். அவள் மறைவு அவனுக்குப் பெரிதும் ஏமாற்றமாயிற்று. அவள மறைந்துவிட்டாளாயினும், அவள் தோற்றம் அவன் மனக் கண்ணினின்றும் மறைந்திலது. அவளேயே கினேந்து விடு சென்றான். அங்கினேவு மிகுதியால் உறக்கமும் அற்றுத் துயர் உற்றன். பொழுது புலர்ந்ததும் அவள் மன நோக்கிச் சென்றான் வழக்கம்போல், அவளும் தன் தோழியரோடு வெளியே வந்து, சிறிது நாழிகை ஆடியும் பாடியும் மகிழ்ந்திருந்து மனே புகுந்தாள். அவள் அன்பைப் பெறுதல், அவனுக்கு அன்றும் இயலாது போயிற்று இவ்வாறே காள்பல கழிந்தன. அவள் அன்பைப் பெறமாட்டாக் கவலையால், அவன் உடல்