பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 நற்றிணை

உடன் வருவாயாக ‘ என வேண்டிக் கொண்டான்.

மானத்தையும் மதியா அவன் காதல்மாட்சிதான் என்னே ! -

‘’ பெருங்கண் ஆயம் உவப்பத், தங்தை

நெடுங்தேர் வழங்கும் நிலவு மணல் முற்றத்துப் பக்தொடு பெயரும் பரிவுஇல் ஆட்டி, அருளினும், அருளாள் ஆயினும், பெரிது அழிந்து பின்நிலை முனியல், மாகெஞ்சே ! என்னது உம் அருங்துயர் அவலம் தீர்க்கும் - மருங்து பிறிதுஇல்லை யான் உற்ற நோய்க்கே.1 இவ்வாறு நாள்தோறும் அவளேக் காணச் செல்லும் அவன், அவளேக் காணும் ஆர்வமிகுதியால், ஒருநாள் விரைந்தோடும் தேர் ஏறிச் சென்று காண்பன் ; ஒரு நாள் கால் வவிக்க வலிக்கக் காதல் மிகுதியால், அக்கால் வலியையும் பொருட்படுத்தாது கடந்தே சென்று காண்பன் ; அவளே அவள் மாளிகைக்குச் சென்று காண் பதோடு கில்லாது, அவள் செல்லும் இடந்தோறும் நிழல். போல் சென்று கண்டு மகிழ்வன். அவள் கடற்கரைக்குச் செல்லின், அவனும் ஆங்குச் செல்வன் ; ஆங்கு அவளுக்கும், அவள் தோழியர்க்கும் அடும்பின் மலர்மீது ஆர்வம் எழுதலேக் குறிப்பால் அறியின், அப்பொழுதே அம்மலரைக் கொய்து கொடுப்பன் , அம்மட்டோடு கில்லாது, அவர் விரும்பா முன்பே, தாழை மலரை ஏறிப் பறித்தும், நெய்தல் மலரை நீந்திப் பறித்தும் தருவன் ;

1. நற்றிணை 140. பூதங் கண்ணனர். ஆயம்-தோழியர் கூட்டம், முற்றம்-மனேயின் முன்புறம் தேர்வழங்கும் முற்றம், மணல் முற்றம் எனக் கூட்டுக. பெயரும்-செல்லும், பரிவு இல் ஆட்டி-நம்பால் அன்பின்மையை ஆளும் அவள். அதாவது நம்பால் அன்பு இல்லாதவள். பெரிது அழிந்து-மிகவும் வருந்தி. பின்கில-பின்சென்று பணிந்து நிற்கும் இழிகிலே. முனியல்-வெறுக்காதே, என்னது .ம்..எவ்வ ளவும். அருந்துயர் அவலம்-கொடிய காமநோயால் யான் .ம்ற துயரை.