பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடமைநெறி கிற்கும் கணவன் 151

தந்த மலர்களே, அவர்கள் மறுக்காது ஏற்றுக்கொள்ளக் காணின், அவள் அன்பை அரிய காதலே அடைந்து விட்டாற்போல் அகமகிழ்வன் , அவன் கிலே இது ; ஆல்ை அவளோ, ஒரு நாளாவது, அவனே அணுகி ஏதும் கேட்டவளல்லள் ; அவள் போக்கு அவனுக்கு வியப் பூட்டிற்று ; “ ஒர் ஆண்மகன், அதிலும் அறிமுக மில்லாதவன், என்பின் திரிகின்றனன்; அதில் அவனுக்கு வெறுப்புத்தட்டுவதாகவும் தோன்றவில்லை; என்னென்பது இவனே ஏன் இவன் என்னேச் சுற்றித் திரிகிருன் இவன் செயலுக்கு யாதேனும் காரணம் உண்டுகொல் ? அல்லது, அது அவன் அறியாமை வயப்பட்டதுதானே என்று அவள் என்றேனும் என்னேப் பற்றி எண்ணிப் பார்ப்பது உண்டுகொலோ என்று எண்ணி ஏங்கிற்று அவன் உள்ளம் , அவ்வேக்கம், அவன் காதற்றுாய்மையினேக் காட்டி கிற்றல் காண்க.

‘ கடுங்தேர் ஏறியும், காலிற் சென்றும்

கொடுங்கழி மருங்கின் அடும்புமலர் கொய்தும், கைதை தூக்கியும், கெய்தல் குற்றும் புணர்ந்தாம் போல உணர்ந்த கெஞ்சமொடு வைகலும் இணையம் ஆகவும்...... பின்நிலை முனியா கம்வயின் - என்என கினையுங்கொல் பரதவர் மகளே.’ நாட்கள் பல சென்றன அவன் உள்ளத்தை, அவன் காதற்பெருமையை அப்பெண்ணும் அறிந்துகொண்டாள். ஆல்ை, அவள் பெண்மை அதை மறைத்துவிட்டது :

1, நற்றிணை 349. மிளைகிழான் கல் வேட்டஞர்.

கடுந்தேர்-விரைந்ததேர். கொடுங்கழி-வளைந்து வளைந்து செல்லும் - உப்பங்கழி: கைதை-தாழம்பூ தூக்குதல்-பறிக்கத்துக்குதல். குற்றும்பறித்தும். வைகலும்-நாள்தோறும். இணையம்-இத்தன்மையம். முனியாவெறுக்காத ; நம்வயின்-நம்மைப் பற்றி. பரதவர்-நெய்தல் கில்த்து மக்கள்.