பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடமைநெறி நிற்கும். வன். L)

மகளிர்க்கு மெல்லியல் கல்லார் எனும் ல்ெ

சூட்டியவன் தமிழ் மகன்; அக்கால ஆண் மகன், மகளிரின் மென்மைத் தன்மையை உணர்ந்திருந்தான் ; மகளிர், மலரினும் மெல்லியர் : வாழ்க்கையில் சிறிது வருத்தம் நேரினும் அவர் உள்ளம் வாடும் , துயர் தாங்கும் உரம் அவர் உள்ளத்திற்கு இல்லை. அதல்ை, அவர் உள்ளமும் உடலும் ஒரு சிறிதும் தளராவாறு, அவரை ஒம்பி வந்தான் ; உள்ளம் வருந்துதற் கேதுவாய நிகழ்ச்சியோ, உடல் வருந்துதற் கேதுவாய உழைப்போ நேர்ந்த வழி, இனிய, உரைபல வழங்கியும், அவர் தம் இனிய பண்புகளே எடுத்துப் பாராட்டியும், அவர் அவ்வருத்தத்தை மறந்து, மகிழ்ந்து வாழுமாறு செய்தான்.

ஒர் ஆண்மகன், தன் இளம் மனேவியோடு வெளி பூருக்குச் செல்ல வேண்டியதாயிற்று ; கடந்து செல்ல வேண்டிய வழி, கிற்கவும் நிழல் இல்லா வறண்ட பாலைவனங்களேப் பெற்றிருந்தது. வழியின் இவ் ‘வியல்பினே அவள் அறிந்திருந்தாள். அதல்ை அவ் வழியைக் கடந்துசெல்ல அவள் உள்ளம் சிறிதே நடுங் கிற்று. அவள் உள்ள கிலேயை, ஒருவாறு உணர்ந்து கொண்டான் அவன். அச்சத்தோடு வருவாளே அழைத் துச் செல்லுதல் கூடாது ; அவள் மகிழ்ந்து வருதல் வேண்டும் ; காதலளுேடு வழியைக் கடந்து செல்ல வேண்டும் எனும் ஆசை உள்ளத்தைத் தூண்ட, உவந்து வருதல் வேண்டும் என உணர்ந்தான். அவளே அணுகி, பெண்ணே கடந்து செல்லவேண்டிய வழி மரம் செறிந்த காடுகளேயும், நிழலின்றி நீண்ட பாழும் பால் நிலங்களேயும் உடைத்து என்பது உண்மை ; ஆனால், அக்காடு நீ நினேப்பதுபோல் கொடுமையுடையதன்று : ஆங்குள்ள மரங்கள் புதிய தளிர் ஈன்று தண்ணெனக்

10