பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடமைநெறி நிற்கும் கணவன் 155

நறும் தண் பொழில் கானம் ; குறும்பல்.ஊர யாம் செல்லும் ஆறே.1 காட்டு வழியைக் கடந்து செல்கிறார்கள். காதலி முன்னே செல்ல, அவள் நடை அழகு கண்டு மகிழ்ந்த வண்ணம், அவளேப் பின் தொடர்ந்து செல்கிருன் காதலன். அவ்வாறு செல்வான், அவள் கடையில் சிறிது விரைவு.தோன்றக் கண்டான், அவள் நடையழகில் மகிழ்ந்து கினேவிழந்திருந்த அவன், அவ்விரைவு கண்டு அஞ்சின்ை அவ்விரைவிற்குக் காரணம் யாது என நோக்கினன் தலை நிமிர்ந்து, செல்லும் வழியைப் பார்த் தான். செல்வாரின் கால்களேச் சிதைக்கும் கூர்மை வாய்ந்த பரல் கற்கள் பரவிக்கிடந்தன. அலை கொணர்ந்து குவிக்கும் மணல் பரந்த இடத்தில் வாழ்பவள் அவள். அம் மணல் மீது, புன்னே மலர்கள் உதிர்ந்து மணம் வீசும் இடங்களில் மட்டுமே நடந்து பழகியன அவள் அடிகள் ; அவ்வடிகள், பரல் பரந்த இப்பாலே ‘கிலத்தில் படும் துன்பமிகுதியால் துடி துடித்தன. மேலும், வழியின் இரு மருங்கிலும் கண்ணுெளி புகாக் காடுகள் ; அக் காட்சி அவள் உள்ளத்தில் அச்சத்தை ஊட்டிவிட்டது. அச்சம் மிக்க அவ்விடத்தை விரைந்து கடக்க வேண்டும் என விரும்பிற்று அவள் உள்ளம் : இவையே அவள் விரைவிற்குக் காரணமாம் என உணர்ந்தான். உடனே, பின் தொடர்ந்து சென்றவன், விரைந்து முன் வந்து அவளேத் தடுத்து கிறுத்தினன். அவள் காலின் மென்மையைப் பாராட்

1. நற்றிணை ! 9. பாலையாடிய பெருங்கடுங்கோ.

வைகி-தங்கி, வண்டல்-மணல்வீடு அமைத்து ஆடும் விளையாட்டு. தைஇ - புனைந்து. வால் - ஒளிவீசும். எயிற்றேய் - பற்களை உடையோய். மாநன-மாமரத்தின் அரும்பு. கொழுதி-அலகுகளால் கோதி. ஆலும். கூடி விளையாடும். பொழில-பொழில்களே உடைய. ஆறு-வழி.