பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 - நற்றிணை

வழி நடை வருத்தம் தோன்றா Tஅறு அழைத்துச் செல்லும் அவன் காதல்உள்ளத்தை எவ்வாறு புகழ்வது ?

‘ நின், வீபெய் கூந்தல் வீசுவளி உளர

ஏகுதி மடங்தை எல்லின்று பொழுதே : வேய்பயில் இறும்பில் கோவலர் யாத்த ஆபூண் தெண்மணி இயம்பும் உதுக்காண் தோன்றும் எம் சிறுகல் ஊரே.1

&!-6yl sy. :

உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடமை விதிக்கப்பட்டுள்ளது. அக்கடமையில் வழுவாது வாழ்பவரே உயர்ந்த வாழ்வினராவர். கடமையை மறக் தவர், மனிதப் பண்புடையவராகார் ; ஆல்ை காதலே கோக்கக், கடமை ஆற்றல் வாய்ந்ததன்று; காதல் கடமை எனும் இரண்டனுள் பேராற்றல் வாய்ந்தது காதல். காதல் வெறி, கடமையை மறக்கச் செய்யும்; காதலில் ஊறிய கருத் துடையார், கடமை உணர்ச்சியும் உடையராதல் இயலாது. காதல் அற்றவர் உள்ளத்தில் கனிவு தோன்றாது ; அன்போ, அருளோ அவர் உள்ளத்தில் அரும்பாது. ஆதலின் காதல் உள்ளம் ஒவ்வொருவருக்கும் வேண்டும். ஆல்ை. அக் காதல், கடமையை மறக்கச் செய்யுமளவு வெறி பிடித்து விடுதல் கூடாது. காதல் உடைமையால், கடமையைக் கைவிடுவார், மக்கட் பிறவியினராகார். காதலும் வேண்டும்; கடமையை மறவாமையும் வேண்டும், அவரே உயர்ந்தோர் ; உலகியல் உணர்ந்தோர் : அன்பும் அறநெறி கிற்றலும் வாய்க்கப் பெற்ற அறிஞராவர்.

1. நற்றிணை : 264. ஆவூர்க்காவிதிகள் சாதேவனர். வீ.மலர். பெய்-அணிந்த வளி-காற்று. உளர பறந்து அலைய, எல்லின்று-ஒளி மழுங்கியது. வேய்-மூங்கில். பயில்.மிக்க. இறும்பு-சிறு குன்று. பாத்த-கட்டிய உதுக்காண்-அதோ பார். -