பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடமைகெறி நிற்கும் கணவன் 159

இதை உணர்ந்தவன் நற்றிணே நாட்டு நல்லோன் ; கருத்திற்கிசைந்த காதலியை மணந்து மேற்கொண்ட மனேயற வாழ்வு, விருந்தினர்க்கு வாழ்வளிக்கும், வறுமை யால் வருந்துவார்க்கு வாரி வழங்கும், கட்டோர்க்குத் துணே புரியும்நலம் உடையதாதல் வேண்டும் என விரும்பி அவ்வாழ்வு பெறத் துணைபுரியவல்லது பொருள் என உணர்ந்து, அப்பொருளேத் தேடிப் பெறுதல் வேண்டும் எனும் கடமையுணர்வு வாய்க்கப்பெற்றவன் அவன். காத லால் தான் பெறும் இன்பத்திலும், கடமையை கிறை வேற்றுவதால் பெறும் இன்பம் குறைவுடையதன்று ; மாருகப் பிறர்க்குப் பயனும் பெருமையும் உடைத்து என உணரும் உள்ளம் உடையவன்.

ஒரு வினேயைத் தொடங்கி வெற்றிகாணல் அவ் வளவு எளிதன்று ; கருமமே கண்ணுயிருப்பவர் மெய் வருத்தம் பாரார் ; பசி நோக்கார் ; கண் துஞ்சார் ; எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளர்ர் , செவ்வி அரு ைேமயும் பாரார் ; அவமதிப்பும் கொள்ளார் ; இவ்வளவு கட்டுப்பாடாயிருப்பவரே, எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவர் ; இவ்வளவு ஊக்கமும் உறுதியும் காட்டி உழைத்த விடத்தும், காரியம் கைகூடாமல் போதலும் உண்டு , ஒன்றை கினேக்கின் அது ஒழிந்திட்டு ஒன்று ஆகும் , அன்றி அதுவரினும் வந்து எய்தும் ; ஒன்றை கினேயாத முன் வந்து கிற்பினும் நிற்கும் எனும் உலகியல் உண்மை, எடுத்த வினையில் வெற்றி காணல் எத்துணே இடர்ப்பாடு உடைத்து என்பதை எடுத்துக் காட்டுவது அறிக. உலகியல் கிலே இதுவாக, ஒருவர் ஒரு வினையைப் பலகாலும் எண்ணி எண்ணிப் பார்த்து இறுதியில் தொடங்கி, இடையில் நிகழ்ந்த இடையூறுகளே யெல்லாம் எதிர்த்துப் போராடிப் போக்கிக், கடைசியில் முடித்து வெற்றி பெற்றாராயின், அவர் உள்ளத்தில், அக்