பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 நற்றிணை

காலத்தில் ஊற்றெடுத்துப் பாயும் பேரின் பத்திற்கு ஒர் எல்லே காணல் இயலுமோ தொடங்கிய வினையில் வெற்றி கண்டார் கொள்ளும் இன்பத்தினே அளவிட்டுக் காணல் இயலாது ; அவ்வின் பத்திற்கு இணையான இன்பம் வேறு எங்கும் இல்லை. அவ்வின்பம் ஒப்பும் உயர்வும் அற்ற பேரின்பமாம். அவ்வின்பத்தின் இயல் புணர்ந்த அக்காலத் தமிழ் மகன், அது, தன் மனேவியால் தான் பெறும் இன்பத்திற்கு கிகாம் வினேக் கண் வெற்றி பெற்ற வழிப் பிறக்கும் பேரின் பத்திற்கு நிகராம் என் மனைவி தரும் பேரின்பம் , கடமை இன்பத்திற்கு நிகராம் காதல் இன்பம் ” எனக் கூறிக் கடமையின் பெருமையினேக் காட்டியுள்ளான் ; -

“ வினை முடித்தன்ன இனியோள்.'1

காதலேயும் கடமையையும் ஒப்ப மதித்து, இரண் டனுள் எதையும் கைவிடல் இயலாது கலங்குவன் ஒருவன் : ஒரு காள் பொருளின் இன்றியமையாமையின. உணர்ந்தான் ; இன்பம் அளிப்பது பொருள் ; ஈகைக்கு வழி செய்வது பொருள் : புகழைத் தருவது பொருள் : அப்பொருள் வீட்டையும் நாட்டையும் மறந்து சென்று வருங்கித் தேடுவார்க்கே வாய்க்கும் என அறிந்தான். அதல்ை பொருள் தேடிப் போகத் துணிந்தான். ஆனல் அவனே அண்மையில் மணம் செய்து கொண்டவன். கவின் மிக்க காரிகையின் காதலால் கட்டுண்டவன். செவ்வரி பரந்து அன்பு காட்டும் அவள் கண்ணழகிற்கு அடிமைப்பட்டவன். அதல்ை அவளேப் பிரிந்து போகத் தயங்கினன். பொருளின் பெருமையை ஒரு சிறிது குறைத்து மதிப்பிடவும் துணிந்தான். அதனுல் கடம்ை யில் ஊறிய அவன் உள்ளுணர்வு பொருள்தேடிப்போ

, 5857: 8. @ST&T.: