கடமைநெறி நிற்கும் கணவன் 161
எனத் துரத்தவும், அவன் கேளாயிைனன். அம்மட்டோ! அவ் வுள்ளுணர்விற்கே அறிவூட்டவும் முன்வந்தான். ‘நெஞ்சே ! காதலியொடுகூடி, இல்லில் இருந்து வாழின், காதலி தரும் இன்பத்தைப் பெறலாம். ஆனல் பொருள் பெறுதல் இயலாது. காதலியைப் பிரிந்து பொருள் தேடிச் சென்றால், திரண்ட பொருள் பெற்றுத் திரும்ப லாம். ஆல்ை, காதலியோடு கூடி வாழ்வதால் உண்டாம் இன்ப ததைப் பெறுதல் இயலாது. ஆகவே, இவ்விரு. கிலேயையும் ஒப்பு நோக்கின் இரண்டும் ஒரு தன்மையவே. இரண்டிலும் ஓர் இன்பம் உளது. இரண்டும் ஒவ்வொரு வகையால் நன்மை உடையவே. ஆகவே இரண்டனுள் எதைச் செய்யினும், நீ நல்லதையே செய்தவை ஆகுவை. என்றாலும் மனேவியை மறந்து போய்த் தேடும் பொருள் கிலேயற்றது. நீரில் மீன் ஒடிய வழி, சிறிது பொழுதும் கில்லாது மறைந்து அழிதல் போல் தாம் இருந்த இடமும் தெரியாமல் அழிந்துபோகும் இயல்புடையது >அப்பொருள். ஆகவே, நீண்ட கடல் சூழ்ந்த இப் பரந்த உலகையே அளவு கருவியாகக் கொண்டு, ஏழுமுறை அளக்கப் பெறும் அளவுள்ள பெரும் பொருளேயே பெறுவ தாயினும், யான் அதை விரும்பேன். இவளைப் பிரிந்து வாரேன். அப்பொருள் எவ்வளவு சிறப்புடையதாயினும் ஆகுக என்று கூறி மறுத்து விட்டான். காதல் வேகம், அவன் கடமையுணர்ச்சியையே கலக்கிவிட்டது போலும்!
புணரின் புணராது பொருளே பொருள்வயின் பிரியின், புணராது புணர்வே ; ஆயிடைச் சேர்பினும், செல்லாயாயினும் நல்லதற்கு உரியை, வாழி, என்நெஞ்சே! பொருளே, வாடாப்பூவின் பொய்கை காப்பண், - ஓடுமீன் வழியின் கெடுவ, யானே விழுநீர் வியல்அகம் தூணிஆக