பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 - நற்றிணை

எழுமாண் அளக்கும் விழுநிதி பெறினும் கனங்குழைக்கு அமர்த்த சேய்அரி மழைக்கண் அமர்ந்தினிது நோக்கமொடு செகுத்தனன் , எனைய ஆகுக வாழிய பொருளே !'1

அவன், காதல் வெறியால் கடமையை மறந்தா யிைனும், கடமையுணர்ச்சி வாய்ந்த அவன் அறிவு, அவனேக் கைவிட்டிலது. அவனுக்கு அறிவூட்டி, அவனேக் கடமையில் சிறந்தவனுக்கும் கருத்தைக் கைவிட்டிலது. அதல்ை, அவ்வுள்ளுணர்வு அவனே விளித்து, “ அன்பு ! இன்ப நுகர்வே உனது கருத்தாயின், காதலியைக் கைவிட்டுச் சென்று தேடிப் பெறும் பொருளும், இன்பும் தரும். ஆகவே அப்பொருள் தேடிப் போகத் தயங்காதே.” என்றும், காதல் மிகுதியால் கடமையை மறப்பினும், வறுமைவருத்த வந்து, உன் வாயில் முன் நின்று இரப் பார்க்கு இல்லை எனக் கூறும் இழிநிலையினே நீ மறத்தல் இயலாது. அந் நிலையினக் கண்டும் உயிர் வாழ்தல் உன்னல் இயலாது. அங்கில உண்டாகாவாறு உன்னேக்” காப்பது கடமை. ஆகவே அக்கடமையுணர்ந்து, பொருள் தேடிப் போவாயாக ‘ என்றும் அறிவுரை கூறிற்று. அவ் வறிவுரை கேட்ட அவன், அதற்கு மேலும் தயங்காது. அழகும், அன்பும் வாய்ந்த தன் ஆருயிர் மனேவியைப் பிரிந்து, பொருள் தேடி வருவான் வேண்டி, வேற்றுார் நோக்கிப் புறப்பட்டு விட்டான். - - •

1. கற்றிணை 16. சிறைக்குடியாந்தையார். . புணரின்-தலைவியொடு கூடி வாழின் புணராது-சேராது. ஆயிடை அவ்விரண்டிற்கும் இடையில், நாப்பண்-நடுவே. வழியின்-வழி அழிவதைப் போல். விழுநீர்பகடல். வியல்.அகம்-அகன்ற உலகம். துணி-அளக்கும் மரக்கால். எழுமாண்-ஏழுமுறை. சேய்சுரி-செவ்வரிபரந்த மழைக்கண்அன்பொழுகும் கண். அமர்ந்து பொருந்தி. செகுத்தனன் - பார்வையால்

அழிந்து போனேன். எனய-எத்தன்மைய