பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடமைநெறி கிற்கும் 6Ta 163

கடமையைக் கருதிக் காதலியை மறந்து காட்டு வழியிற் சென்று விட்டானேனும் அவளே மறந்து விடுதல் அவனால் இயலாது போயிற்று. பிரியுங்கால் அவன் கண்ட அவள் பேரழகுத் தோற்றம், அவனப் பிரிந்து வாழ மாட்டாது அவள் கொண்ட பெருந்துயர் ஆகிய இவ்விரண்டும், அவன் உள்ளத்தை விடாது பின் தொடர்ந்தன. அவனே இளைஞன் ; காலமோ மனேவியோடிருந்து இன்புற்று வாழவேண்டிய காலம். அவளோ பேரழகுடையாள் ; இங்கிலேயில் அவன் உள் ளம் அவள் அழகிற்கு அடிமையாகி விட்டது.

அடிமைப்பட்ட உள்ளம், சென்று கொண்டிருந்த அவனே மேலே செல்லாவாறு தடுத்துவிட்டது. அன்பும் அழகும் உடையாளப் பிரிந்து வந்தது தவறு. தன் அன்பாலும் அழகாலும் இன்பம் தந்தாளேப் பிரிந்து வந்தது தவறு; அதிலும், அவள், கின்பிரிவினைத் தாங்க மாட்டாது துயர் கொண்டு வருந்துமாறு விடுத்துவருவது பெருந்தவறு. ஆகவே, உன் இன்பம் கருதியும், அவள் “துன்பம் துடைத்தல் கருதியும், மேலே செல்லாது மீண்டு ஊர் செல்வாயாக” எனக் கூறியது. அவன் இயல் பாகவே காதலால் கிறைந்தவன். காதலியின் கண்ணிர் கானின், கலங்கா அவனும் கலங்குவன். அத்தகைய குதலின், தன் காதலியின் துயர் கிலேயினேப் பிறர் எடுத்துக் காட்டிய பின்னரும், அவள்பால் சென்று, அவள் துயர் துடைக்காது, கருதிவந்த கடமை மேற்கொண்டு மேலே செல்வது இயலாது போயிற்று. அதனல் விரைந்து சென்று கொண்டிருந்தவன், இடைவழியில் நின்று விட்டான். அவன் கால்கள் மேலே செல்ல “மறுத்துவிட்டன. . -

கடமை மேற்கொண்டு வந்த அவன், அவன் காதற் சிறப்பு, காதலையும் கடமையையும் கைவிட மாட்டாது