பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடமைநெறி நிற்கும் கணவன் 165

துயர் பொருது கண்ணிர் பெருக கிற்கும் அவள் கலங்கிய கிலேயும் அவனே ஊர் நோக்கித் துரத்தின அறிவு எடுத்துக்காட்டிய கடமையுணர்ச்சி, வினே மேற்கொண் டார் ஒருவர், அவ்வினையை முடிக்கும் வகை, அதைக் குறைவறச் செய்து முடிப்பதால் அவருக்கு உண்டாம் புகழ், எடுத்த வினையை இடையே கைவிடுவார்க்கு உண்டாம் பழி ஆகிய இவைகள், அவனே வினேமேற் கொண்டு செல்க எனத் தூண்டின. காதலுக்கும் கடமைக்கும் நடைபெறும் இப் போராட்டத்தை ஒதுங்கி நின்று பார்ப்பதல்லது, அவற்றுள் எதன்பால் நிற்பது என்பதை அவனல் துணிய இயலவில்லை. அப் போராட்டம், தன்உடலயும், உயிரையும் ஒருங்கே அழித்து விடுமோ என அஞ்சினன். அங்கிலையில் பண்டு காட்டில் கண்ட காட்சியொன்று அவன் மனத்திரையில் காட்சி தந்து அவனே மேலும் கிலேகலங்கப் பண்ணிற்று.

இரண்டு பெரிய மதயானைகள் ஒன்றாேடொன்று பகை இகாண்டு போரிடத் தொடங்கின. அவற்றின் போராட் ‘திற்குக் காரணமாயது ஒரு சிறிய கயிறு. அவ்யானேகள் இரண்டும் கயிற்றின் இரு முனேகளேயும் பற்றிக்கொண்டு ஈர்க்கின்றன. ஆற்றல், ஆண்மை, ஆண்டு இவற்றில் யானேகள் இரண்டும் ஒரு தன்மைய. கயிற்றைப் பெறும் ஆசை களிறுகள் இரண்டின் உள்ளத்திலும் ஆழப் பதிந்துவிட்டது. அதனால் ஒன்றற்கொன்று ஒரு சிறிதும விட்டுக்கொடாது பற்றி ஈர்க்கத் தொடங்கின. அங்கிலையில் அவற்றின் கைகளுக்கிடையே, புதிய வலிய பெரிய கயிறே சிக்குறினும், வலிவற்றுச் சிதைந்துபோம். ஆனல் ஆயானேகளுக்கிடையே அகப்பட்டு ஈர்க்கப்படும் அக்கயிருே, ஒரு பழங்கயிறு. யானேகள் வெற்றி தோல்வி கானும் வரை அழியாது நிற்பது அரிது. அவற்றின் ஈர்ப்பைத் தாங்கவல்ல திண்மை அதற்கு இல்லே. நைந்து தேய்ந்து