பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. மனையற மாட்சி மிக்க மனைவி

ஒருவர், ஊரும் உலகமும் புகழும் உயர்ந்தோரா வதும், பெற்றாேரும் உற்றாரும் பழிக்கும் இழிந்தோரா வதும், அவர், அவர்தம் இளமையில் பெறும் உணர்ச்சி களால் ஆம். இளமையில் ஒருவர் பெறும் உயர்ந்தல் ஒழுக்கம், வாழ்க்கையில் அவரை உயர்ந்தோராக்கும் ; அக்காலத்தில் அவர் பெறும் ஒழுக்கக் கேடுகள், பிற் காலத்தே அவரை இழிந்தோராக்கும். ஒருவர் வாழ்வின் தகுதியை வகுப்பது அவர் இளமைக் காலமேயாதலின், அவ்விளமைக் காலம், நல்லதன் நலனேயும், தீயதன் தீமையையும் உணர்ந்து கொள்ளும் அறிவு வாய்க்கப் பெருக் காலமாம் ; அதனுல், இளமைப் பருவம் உடையார், உயர்ந்த நெறியிது, தாழ்ந்த நெறியிது எனத் தாமே, உணர்ந்து கோடல் இயலாது. ஆதலின் அவ்விளமைக் காலத்தில அவர் அருகில் இருந்து அவரை வளர்ப்பவர்’ ஒழுக்க நெறி யுணர்ந்த உயர்வுள்ள முடையராதல் வேண்டும். . - -