பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- Tu மாட்சி மிக்க மனைவி 169


மக்களின் இளமைப் பருவத்துப் பெரும் பகுதி, தாயின் அணேப்பில் கழிவதாகும்; மக்கள், தம் இளமைக் காலத்தைத் தாயோடிருந்தே கழிப்பர் ஆதலின், அத் தாய்க்குலம், ஒழுக்க நெறியுணர்ந்து, உயர்ந்த பண்பு களால் கிறைந்ததாதல் வேண்டும். இவ்வுண்மையை உணர்ந்து வாழ்ந்தவர் தமிழர் அதனுலேயே, அத்தாய்க் குலமாம் மகளிர் குலம், மாண்புடையதாதல் வேண்டும் என்பதில் பெரிதும் விழிப்புடையராயினர் ; மகளிரை, மணிகளிற் சிறந்த மாணிக்கமென மதித்துப் போற்றினர். அவர் போற்றுதலுக்கேற்ப, பழந்தமிழ் மகளிரும், மாண்பு மிக்க, மனமாட்சி வாய்ந்த நல்லோராக வாழ்ந்து வழி காட்டிச் சென்றனர்.

மகளிர், பிறப்பால் பெண்டிர் எனும் பொதுவியல் புடையரேனும், சிறப்பால் அவர் ஒருவரல்லர் ; தாய் எனவும், மனைவி எனவும் நிலையால் வேறுபடுவர் சிலர் ; தோழி எனவும் செவிலி எனவும் தொழிலால்பிரித்துணரப் படுவர் மற்றும் சிலர் , பழந்தமிழ் மகளிர், மகளிர்குலம் அனேத்திற்கும் ஏற்புடைய பொதுப் பண்புகளேப் பெற்றி ருந்ததோடு, வாழ்க்கையில் அவரவர் நின்ற கிலேக்கேற்ற சிறப்பியல்புகளேயும் சிறக்கப் பெற்றிருந்தனர். மகளிர்க் குரிய பொதுப் பண்பும், மனேவியர்க்குரிய காதல், கற்பு எனும் மாண்பும் ஒருங்கே பெற்றுப் பெருமையுற்றாள் மனேவியாம் கிலேபெற்ற தமிழ் மகள் , அன்பு காட்டியும், அறிவு ஊட்டியும், ஒழுக்க நெறி நிறுத்தியும் மக்களே வளர்க்கும் மாண்புடையவளாய் விளங்கிளுள் தாயாம் தகுதியுடைய தமிழ்க்குலப் பெண் ; உலகியல் உணர்ந்து, உற்ற துண்புரிந்து, உயர்ந்த வழிகாட்டியாய் வாழ்ந்தாள், தோழி எனும் தாயகில் பெற்ற தமிழ்ப் பெண் ; நற்றின் வழங்கும் நாட்டில் வாழ்ந்த அம்மகளிருள் சிலரைக் கண்டு, அவர்தம் மாண்புணர்ந்து மகிழ்வோமாக. . . .

11