பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. மலை நிலம்

நிலங்கள் நான்கனுள் முதற் கண் தோன்றிய நிலம், மலேகிலம் : மக்கள், உழைத்து வாழும் வகை அறியாது வாழ்ந்த காலத்தில், அவர்களுக்கு இடம் அளித்துப் பேணிய பெருமையுடையது மலை நிலம் : இயற்கை அளித்த காய்கனி கிழங்குகளால் அவர்கள் உயிரை ஒம்பிய உயர்வுடையது அம்மலே கிலம். மழையையும் வெயிலேயும் மறைக்கும் மாளிகைகளென மலைக்குகைகளைக் கொடுத்துக் குடியோம்பியது அக்குன்று கெழு நாடு. பளிங்கெனத் தெளிந்த சுனேருேம், அச்சுனேகளின்றும் பெருகி ஒடும் அருவி நீரும் அளித்து, அம்மக்களின் தண்ணிர் வேட்கையைத் தணித்ததும் அம்மலே கிலமே. இவ்வாறு, அக்கால மக்கள், கண்விழித்து நோக்கும் இடங்களிலெல்லாம், அவர்க்கு வேண்டும் உணவுப் பொருள்களேயும், உண்ணு நீர் நிலைகளேயும், உறங்கும் இடங்களையும் வைத்துப் பெருமையுற்றது அம்மல் கிலம். அம்மலை வளத்தை அன்று தாம் கண்டு மகிழ்ந்த அம் மலைக் காட்சிகளே, அழகிய உயிரோவியமாகத் திட்டி