பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 கற்றிணை

அமைதி நிறைந்து இன்பம் பொங்கும் வாழ்வை வேண்டுவார், மனேயற மாண்பு வாய்ந்தாளொருத்தியை மனைவியாகப் பெறத்தக்க பேறுடையராதல் வேண்டும் , அவர் வாழ்வே மனக் கவலையற்று, மகிழ்ச்சி நிறைந்து விளங்கும். ஆண்டுகள் பல கழியவும் கரைதிரை பெருமைக்கான காரணங்களுள் சிறந்தது, மனேமாட்சி மிக்க மனேயாகிளப் பெற்றதே எனக் கூறினர், பிசிராங்தை யார் எனும் பெரியார் : யாண்டு பல ஆகியும் கரை இல ஆகுதல், யாங்கு ஆகியர் ? என வினவுதிராயின், மாண்ட என் மனேவியொடு மக்களும் நிரம்பினர் ‘1, இல்லது என், இல்லவள் மாண்பால்ை “9 என்று கேட்கிறார் வள்ளுவப் பெருந்தகையார். காதல் கற்பு எனும் இருபே ரொழுக்க நெறியிலும் கலங்காது கின்று, தமிழ்க்குல மகளிரின் தனிச் சிறப்பை உலகிற்கு உணர்த்தியுள்ளனர், மனைவியாம் நிலைபெற்று வாழ்ந்த தமிழ் மகளிர்.

கணவன் தகுதி கண்டவள் :

மனே வியின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்து. விளங்குபவன் கணவன் ; கணவன் வேறு, மனேவி வேருகப் பிரித்துக் காணல் இயலாது. கணவனின் உயர்வு தாழ்வுகள் மனேவியையும், மனேவியின் உயர்வு தாழ்வுகள் கணவனேயும் சார்ந்தே காணப்படும். கணவன். வடிவை மனேவியிடத்திலும் மனேவி வடிவைக் கனவு னிடத்திலும் காணலாம். ஆகவே, இருவரும் இயல்பால் ஒத்த வராதல் வேண்டும். இருவருள் ஒருவர் உயர்ந்து, ஒருவர் தாழ்ந்து விளங்குவராயின், அவர் வாழ்க்கை

. 1. புறநானூறு 191. பிசிராந்தையார். -

யாங்கு ஆகியர்-எப்படி ஆயினீர் மாண்ட-மாட்சிமைப்பட்ட கிரம் பினர்-அறிவால் நிரம்பினர்.

2. திருக்குறள் : 53.