பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனயற மாட்சி மிக்க மனைவி 171

வண்டி இனிது செல்லாது. ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப “ எனக் கணவனும் மனேவியும், பிறப்பாலும் சிறப்பாலும் ஒப்ப உயர்ந்தோராதல் வேண்டும் என விதிவகுத்துச் சென்றார், ஆசிரியர் தொல்காப்பியர்ை.

இதை உணர்ந்தவள் தமிழ்ப்பெண், கணவனுக மேற்கொள்ளத் தக்கவனிடத்தில் காணலாம் தகுதி, தகுதி பின்மைகளே உணர்ந்து கொள்ளும் அறிவினை, அவள் கிறையப் பெற்றிருந்தாள். அதனல், அவள் பெற்றேர் அவளுக்குரிய கணவனேத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அவளிடத்திலேயே ஒப்புவித்திருந்தனர்; அவள் தேர்வில் தவறு நேர்ந்துவிடாது என உறுதியாக நம்பினர் ; அவளும், அவர் நம்பிக்கை விண்டோகாவாறு நடந்து கொண்டாள் தன்னக் காதலிக்கும் ஆண் மகனின் ஒழுக்க நெறியினை உணர்ந்துகொண்ட பின்னரே, அவள், அவன் காதலே ஏற்றுக்கொண்டாள்.

தனக்கேற்ற கணவனேத் தேர்ந்து எடுத்துக்கொண் கூாள் ஒரு பெண் ; அதை அறிந்த அவள் தோழி, நின் கணவன் தகுதி பாது நல்லவன்தான நம்பிக்கைக்கு உரியவன்தான ?” என்றெல்லாம் கேட்டாள். அதற்கு அவள் கூறியது இது : தோழி ! என் கணவர் சொன்ன சொல் தவருதவர் ; வாய்மை வழுவாதவர்; காதல் கொண்டேன். கைவிடேன் ‘ என்ற அவர்சொல், என்றும், எக்காலத்தும் தவருது எத்தகைய இடையூறுவரினும் சொன்னசொற்படி வாழ்ந்து காட்டும் வன்மை வாய்ந்தவர் ; அவர் கொண்ட அன்பு, இன்று இருந்து, நாளே அழிந்துவிடும் கிலேயற்ற தன்மை உடையதன்று. அஃது, எம் வாழ்நாள் அளவும் வளர்ந்து விளங்கும் : அவர்பால் காணலாம் இனிய பண்புகள் நாள் ஆக ஆக, பெருகுவதல்லது குறையா;