பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 நற்றிணை

என்னேக் கைவிட்டு வாழும் எண்ணம், அவர் கனவிலும் தோன்றாது ; அவர் குற்றமற்றவர் ; தோழி : தேன், எல்லா மலரிலும் கிடைக்கும் ; தேனடைகள் எங்கும் கட்டப் பெறும் ; ஆல்ை அவையெல்லாம் சிறந்தனவாகி விடா , வண்டொன்று தாமரை மலரில் உள்ள தேனே மட்டும் தேர்ந்தெடுத்துச் சென்று, மணம் நாறும் சந்தன மரத்தில் கட்டிய தேனடையில் சேர்த்துவைக்க, அத் தேனடையை அழித்துப் பெற்ற தேன் ஒன்றே, கலப்பற்ற சுவைவாய்ந்த, தனிச்சிறப்புடையதாகும். என் கணவரும் அத்தேனப்போன்ற, இனிமையும் தூய்மையும் உடைய ராவர் ; ஆகவே அவரோடு நான் கொண்ட காதலும் து.ாய்மை உற்றது ; அதுயர் அற்று விளங்குவதாகும்.’ இவ்வாறு கூறி, அத்தகைய நல்லோனேத் தேர்ந்து கொண்ட தன் அறிவுத்திறனே உணர்த்தினுள் அப்பெண்:

“ கின்ற சொல்லர் ; நீடுதோன்று இனியர்; என்றும் என்தோள் பிரிபு அறியலரே ; தாமரைத் தண்தாது ஊதி, மீமிசைச் சாங்தில் தொடுத்த தீங்தேன் போலப் புரைய மன்ற புரையோர் கேண்மை."1

கணவனே எல்லாம் :

நல்லோன் ஒருவனே, அவன் நல்லோன் என்பதை அறிந்து கணவகை ஏற்றுக்கொண்ட பின்னர், மனேவி அவன் வயத்தளாகி விடுதல் வேண்டும்; அவன் வேறு, தான் வேறு என வேறுபட்டு வாழ்தல் கூடாது ; அவன்

1. நற்றிணை : 1. கபிலர். நின்ற-நிலைமை தவருத நீடு - நெடுங்காலம். தாது-தேன். ஊதிஉண்டு, மீமிசை-மேலே, சாந்தில்-சந்தன மரத்தில். தொடுத்த-சேர்த்து வைத்த, புரைய-தூய்மை உடைய மன்ற-உறுதியாக. கேண்மை-கட்பு.