பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



மனையற மாட்சி மிக்க மனைவி 178

வாழ்வு தன்வாழ்வு, அவன் தாழ்வு தன் தாழ்வு எனக் கொள்ளுதல் வேண்டும் , தன்வாழ்வின் கிலேக்களம், தன் உயிரின் பற்றுக்கோடு அவனே எனக் கருதுதல் வேண்டும் ; அவன் இல்லையேல் தான் இல்லை ; எனக் கூறத்தக்க ஒன்றிய கிலேயினளாதல் வேண்டும். அதுவே காதல் வாழ்வும், கற்பு நெறியுமாம்.

இதை உணர்ந்திருந்தாள் தமிழ்ப்பெண். தனக்கும், தன் கணவனுக்கும் உள்ள தொடர்பு எத்தகையது என்பதைத் தன் தோழியிடம் கூறும் ஒருத்தி, “தோழி! உலகத்தில், உயிர்கள் அழியாது வாழ்வது, தண்ணிரின் துணையால் ; நீர் இல்லையேல், அவ்வுயிர்கள் வாழா. உலகமே இயங்காது ; உலகிற்கும், நீருக்கும் எத்தகைய உறவோ, அத்தகைய உறவே, எனக்கும் என் கணவர்க் கும் , எதற்கும் என் கணவரையே எதிர்நோக்கி வாழ்வேன் நான் ; என் கணவர் இல்லாமல் நான் வாழ்தல் இயலாது ; அவர் இல்லையேல் நான் இல்லை : தன்ன வாழ்விப்பவர் அவரே “ என்று கூறி, கணவன் மனைவியர் தொடர்பு, எத்தகையதாதல் வேண்டும் என்பதை எடுத்துக் காட்டியுள்ளாள் : -

“ நீர் இன்று அமையா உலகம் போலத்

தம் இன்று அமையா கம் நயந்தருளி.'1 காதல் இன்றேல் சாதல் :

மகளிர்க்குக் கணவனேடு கூடி வாழும் காதல்

வாழ்வே, வாழ்வின் குறிக்கோள் ; அதுவே அவர் வாழ்வின் பயனுமாம். அக்காதல்வாழ்வை அடைய

1. நற்றிணை : 1. கபிலர். - இன்றி என்பது இன்று எனத் திரிந்துளது. நீா இன்று-நீர் இல்லாமல், அமையா-வாழமாட்டாத, நயந்தருளி-விரும்பி. -