பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனையற மாட்சி மிக்க மனேவி 175

காடல் சான்றாேர் நம்புதல் பழி எனின் பாடுஇல கலுழும் கண்னெடு சாஅய்ச் சாதலும் இனிதே, காதலம் தோழி !'1

நாணின்ே நான் :

காதல் உணர்வு பெற்ற மகளிரின் உள்ளத்தில், ஓர் ஒடுக்கம் இயல்பாக உண்டாகும் , அவ்வொடுக்கத்திற்கு காண் எனப் பெயரிட்டனர் பெரியோர். பெண்மைக் குணங் களுள் பெரிதும் போற்றப்படுவது அந் நாண் ; மகளிர்க்கு நல்ல அணியாய் அமைந்து அழகுசெய்வதும் அந்நானே. நாணிலர் மகளிர், உயிரிலா மண்பாவை போல்வர். நல்ல பெண்கள், நானேத் தம் உயிரினும் சிறந்ததாகக் கருதுவர். நாணின் பெருமை உணர்ந்த அவர்கள், அந்நானேக் காக்க வேண்டித் தம் உயிரையும் இழக்கத் துணிவர். காண இழந்து உயிர்வாழும் வாழ்வை, அவர்உள்ளம் விரும்பாது ; கானுடையார், தம் காதல் ஒழுக்கத்தைப், :பெற்ற தாயும் அறியாவாறு மறைத்தே மேற்கொள்வர். தன் மகள் கொண்ட காதல் ஒழுக்கத்தை, உண்னும் வகையிலும், உறக்க கிலேயிலும், ஏனேய ஒழுக்க முறை யிலும் அம்மகள் பால்காணலாம் மாறுபாடு கண்டு, குறிப் பால் உணர்தல் அல்லது, அம்மகள் உரைக்க உணர்தல் தாய்க்கு இயலாது. . . . . . .

பெண்ணுெருத்தி, ஒருநாள், தன் வீட்டை அடுத்து வளர்ந்திருந்த புன்னேமரத்தின் நிழலில் நின்று கொண் டிருந்தாள். அப்போது அங்கு வந்து சேர்ந்தான் அவள் காதலன் வந்தவன், அவளோடு அம் மரத்தடியிலேயே காதல் விளையாட்டு விளேயாடத் தொடங்கிவிட்டான்.

1. 15T: 387, @. . . . . . . . . . . . . . . . நாடல்-நம்மை விரும்பி நம்பின்திரியும். நம்புதல்-விரும்புதல், பாடு. உறக்கம், கலுமும்-அழுகின்ற. சாஅய்-வருந்தி. . . . . .