பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 - நற்றிணை

அவ்விளையாட்டில் அவளுக்கும் விருப்பம் உண்டேனும், அதை, அம்மரத்தடியில் மேற்கொள்ள நாணினுள் ; அவள் நாணுவது கண்ட காதலன், கண்ணே ! நம்மையும், நம் காதல் விளேயாட்டையும் காண்பார் எவரும் இங்கு இல்லை ய்ாகவும், நீ நாணுவது ஏனே ?” என்று கேட்டான் ; அதற்கு அவள் காதல இங்கு எவரும் இல்லை என எண்ணுவது தவறு நம் காதல் விளையாட்டை, என் தமக்கை பார்த்துக்கொண்டிருக்கிருள். அவள் காண, உம்மோடு நகைத்து விளையாட நாணுகிறது என் உள்ளம் ‘ என்றாள் ; அது கேட்ட அவன், காற் புறமும் சுற்றி கோக்க, எவரும் ஆங்கு இல்லாமை கண்டு, கண்ணே காதலி எவரும் இங்கு இல்லேயே ; மனிதர் வாடையும் வீசவில்லையே இங்கு ! எங்கே உள்ளாள் உன் தமக்கை ‘ என்று வினவினன். அதற் கவள், ! அன்ப என் தமக்கை காம் காண நம் கண் முன்னரே கின்றுகொண்டுள்ளாள் ; அவள் வேறுயாரு மில்லை, இதோ கிற்கிறதே, நமக்கு கிழல் தந்து கொண்டு. புன்னே, அதுதான் என். தமக்கை அது என் தமக்கை என்பதை, என் தாய் அறிவிக்க அறிந்தேன். மகளே ! ஒருநாள் கானும் என் தோழியரும், இங்கு வந்து விளையாடிக் கொண்டிருந்தோம் ; முற்றி உதிர்ந்த புன்னேக் காய்களே, மணலுள் மறைத்து அழுத்திக் கண்டெடுக்கும் ஆடல் மேற்கொண்டு, மகிழ்ந்திருந்தோம். அவ்வாட் டத்தில் யான் புதைத்த ஒருவிதை, என் மறதியால் மண்ணுள்ளேயே கின்றுவிட்டது. அதை அறியாது நாங்கள் வீடு திரும்பிவிட்டோம். சின்னுட்களில், அவ் விதை வேரூன்றி முளேத்து வெளிப்பட்டு விட்டது. அதைக் கண்டு மகிழ்ந்த நான், என் தாய் எனக்குத் தந்த நெய்கலந்த . பால், நாள்தோறும் அதன்மீது ஊற்றி வந்தேன். நாள் ஆக ஆக அது வளர்ந்து பெரிய