மனயற மாட்சி மிக்க மனவி 179
கணவன் துயர் உறக் களித்து மகிழாள் :
தான் இன்புற்று வாழப் பிறர் துன்பத்தில் உழல வேண்டும் என எண்ணு வது பேதையோர் பண்பு. தான்
இன்புற்று வாழ்தற் பொருட்டுக், கணவன் கடுந்துயர்
உறினும் கலங்காதாள், பெண் அல்லள், பேய். காதலால் கனிந்த உள்ளம் உடைய உயர்குல மகளிர், கணவன் இன்பதுன்ப மிரண்டிலும் பங்குபெற எண்ணும் பண்பா டறிந்தவராதலின், அவர்கள், தாம் இன்ப நிலையில் இருத்தற்பொருட்டுக், கணவன் கடுந் துன்பத்திற்குள் ளாவதை விரும்பார். கணவன் தொல்லே மிகுந்த தொழில் மேற்கொள்வதால் வரும் இன்பத்தை அவர் ஏற்றுக் கொள்ளார். அவர் அத்தொழிலே மேற்கொள்ளாமை யால், தாம் துயர்உற வேண்டிவரினும், அதையே விரும்புவர்.
- காதலன் வரவை எதிர்கோக்கிக் காத்திருந்தாள் ‘ஒரு பெண். காலம் இரவின் இடையாமம். அதுகாறும்
அவளோடு உறங்காது விழித்திருந்த அவள் தோழி ,
உறங்கி விட்டாள். ஆனால், காதலனேக் காணவேண்டும்;.
அவன் தரும் இன்பம் பெற்று மகிழவேண்டும் எனும்
ஆசை அவள் கண்கள் உறக்கம் மேற்கொள்வதைத்
தடுத்துவிட்டது. அதனல், தனியே அமர்ந்து காத்துக் கிடந்தாள். திடுமென இயற்கையில் ஒரு மாறுதல் ; காட்டில் காற்றுப் புகுந்து வீசுவதால் எழும் பேரொலி அடங்கிவிட்டது. சிறு அரவமும் கேட்டிலது விண் மீன்கள் விளங்க மறுவற்றுக் கிடந்த வானத்தில் கரு
மேகம் படர்ந்து விட்டது. இடியோசை இடைவிடாது
எழத் தொடங்கிவிட்டது. அடுத்துள்ள குறுங்காட்டில்,
வலியவேழத்தை வீழ்த்திய புலி, அவ்வெற்றிக் களிப்பு
விளங்க முழங்கும் ஒலி, ஒருபால் வந்து ஒலித்தது.