பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 நற்றிணை

இவற்றைக் கேட்டாள்; அவள் உள்ளம் நடுங்கிற்று. இவ்வியற்கைத் திருவிளையாடல் எதையும் அறியாது: அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த தோழியைத் தட்டி எழுப்பிள்ை. துணுக்குற்றெழுந்த தோழி, காதலர் வந்திலரோ ? நீ இன்னமும் உறங்கவில்லையோ’ என வினவினுள். அது கேட்ட அப்பெண், தோழி ! அவர் இன்னமும் வந்திலர். இப்பொழுது வாராமை யால் வருந்துகின்றேனல்லன். அவர் வந்துவிடுவரோ என்றே, அஞ்சுகிறேன். எழுந்து பார் இயற்கைத் திருவிளையாடலே. காட்டைப் பார் ; கருத்து எழுந்து மின்னி இடிக்கும் மேகத்தைப் பார் ; காட்டில் எழும் புலியின் முழக்கத்தைக் கேள்; இக் காட்டையும் மலே யையும் கடந்தன்றாே காதலர் வருதல் வேண்டும். இக் கிலையில், அவர் அவ்வழியில் வருதல் நல்லதன்றே : அவர் அவ்வழியைக் கடந்து வந்து விடுவரோ வந்து இடியாலும் புயலாலும், கொடிய புலியாலும் அவருக்கு என்ன ஏதம் நேருமோ என அஞ்சுகிறது என் உள்ளம்: அங்கினவால் கொதிப்பேறிவிட்டது என் நெஞ்சம். இங்” நேரத்தில் யாரேனும் வந்து, அவர் இன்று வந்திலர் எனும் வார்த்தை வழங்கின் எவ்வளவு நன்றாம் என ஏங்கு கிறது என் உள்ளம். நெருப்பை அவிக்கும் நீரேபோல்: என் நெஞ்சக்கொதிப்பைத் தணிக்கும் நல்ல மருந்தாகி மாண்புறும் அவர் வார்த்தை ; அவ்வார்த்தையைக் கேளாமோ? தோழி!’ என்று கூறிக் கலங்கி கின்றாள்.

கானமும் கம்என்றன்றே வானமும் வரைகிழப்பு அன்ன மைஇருள் பரப்பிப் பல்குரல் எழிலி பாடு ஒவாதே; .

மஞ்சுதவழ் இறும்பில் களிறு வலம்படுத்த வெஞ்சின உழுவைப்பேழ்வாய் ஏற்றை அஞ்சுதக உரறும் ஓசை கேளாது