பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* ‘.

மனயற மாட்சி மிக்க மனைவி 181

துஞ்சுதி யோவில தூவிலாட்டி ! பேரளுர் பொருத புகர்படு நெஞ்சம்

நீரடு நெருப்பில் தணிய, இன்று அவர்

வாராராயினே கன்றே.'1

நான் வருத்தினும் அவர் வாரற்க :

காதலன் வாரான் ஆகுக எனக் கூறக் கேட்ட தோழி, பெண்ணே ! காதலனேக் காணுயாயின் கவலை மிகுந்து வருந்துவை. காதலர் நோயால் உன் மேனி வாடும். நெற்றி ஒளி இழந்து அழகு குன்றும். பருத்த தோள்கள் சிறுத்துவிடும். அதை எவ்வாறு தாங்கிக்கொள்வாய் !” என்று கேட்டாள். அது கேட்ட அப்பெண், “ தோழி அவர் வாராமையால், எனக்கு வந்துறும் கேடு அத்துணைப் பெரியதன்று. நீ கூறிய வாறே, நுதல்பசல் படர்ந்து பாழாயினும் ஆகுக. தோள் மெலிந்து தளரினும் தளருக. இங்கிலேயில் அதைத் தாங்கிக் கொள்ளுதல் என்னல் இயலும், ஆல்ை, காதலர் கொடிய காட்டு வழியைக் கடந்து வருதலே என்னல் தாங்கிக் கொள்ளுதல் இயலாது. அவர் வரும் வழி எவ்வளவு கொடுமை வாய்ந்தது என்பதை நீ அறிவையோ தன்னக் கொல்லவல்ல ஆற்றல் வாய்ந்த பெரிய புலியைத் தாக்கிக் கொன்ற களிறு, அதைக் குத்தியதால் இரத்தம் படிந்து கறைப்பட்ட தன் கோடுகளே, மலேயினின்றும் வீழ்ந்தோடும் அருவியில்

1. நற்றிணை 154. நல்லாஆர்கிழார். -

கம் எனல் - ஒலி அடங்குதல். வரைகிழிப்பு - மலைப்பிளப்பு. இங்கு அப்பிளப்பில் குடிகொண்டிருக்கும் கரிய இருள். மை-கரிய எழில். மேகம். பாடு-இடித்தல். ஒவாது-ஒயாது. மஞ்சு-மேகம். இறும்பு-குறுங் காடு, குன்றுமாம். வலம்படுத்த-வலமாக வீழ்த்திக் கொன்ற உழுவை. புலி. பேழ்வாய் - அகன்ற வாய். உரறும் - முழங்கும். தூவிலாட்டி-வலி யிலாதாய், அளுர்-துன்பம். புகர்படு-துன்பம் மிக்க.