பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 நற்றிணை

கழுவிச் செல்லும் கொடுமையுடையது காதலர் வரும் அக்காட்டு வழி. அதல்ை, காதலர் வந்திலரே எனும் எக்கத்தால் நான்படும் துயரினும், அவர் வரும் வழி, இவ் வளவு இடையூறு நிறைந்ததாயிற்றே எனும் எண்ணத் தால் எழும் துயரே எல்லையற்றதாம். ஆகவே, காதலர் வாராமையால், அவர் தரும் இன்பம் அடையப்பெருது நான் வருந்தி அழியினும், அவர் இன்று வாராதிருக்க விழிச் செய்வாயாக “ என வேண்டிக்கொண்டாள்.

நன்னுதல் பசப்பினும், பெருங்தோள் நெகிழினும்

கொல்முரண் இரும்புலி அரும்புழைத் தாக்கிச் செம்மறுக் கொண்ட வெண்கோட்டு யானை கல்மிசை அருவியல் கழுஉம் சாரல் வாரற்க தில்ல தோழி !'1

வறுமையே ஆயினும் கணவனுேடு வாழ்வேன் :

(கணவன் மனேவியர் இருவருள், செல்வகிலேயில், 9 உயர்ந்துவிடுவாளாயின், அவ்விருவர் வாழ்க்கை யில் அன்போ, அமைதியோ இடம் பெருது. Tdi வாழ்வினும், தன் கணவன் வீட்டு வாழ்வு, சிறிதே தாழ்ந் திருப்பினும், மனேவி கணவனே மதியாள். அவன் வீட்டை விட்டு வெளியேறித் தாய்விடு சென்று விடுவாள். கணவன் வீட்டு வறுமை வாழ்வைப் பலர் அறியக் கூறிப் பழிப்பாள். தாய்விட்டுப் பெருமையினேப் பாராட்டி மகிழ்வாள். இது பெண்களின் பொதுப் பண்பாதல் அறிந்தே, கணவனும் மனேவியும் ஒத்த நிலையினராதல் வேண்டும். மனேவி எவ்வகையாலும் உயர்ந்தவளாதல்

1, நற்றின : 151. இளநாகனர். o .

நெகிழினும் - தளரினும். @5T - கொல்லும். முரண் - பகைமை வாய்ந்த இரும்புலி-பெரிய புலி, புழை-குகை அருகில், செம்மறு-சிவந்த கறை. கழுஉம்-கழுவும். - . .