பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனையற மாட்சி மிக்க மனைவி . 183

கூடாது ‘ஒன விதிவகுத்தார் ஆசிரியர் தொல் காப்பியர்ை.("மிக்கோன் ஆயினும் கடிவரை @8 }

ஆல்ை, அக்கட்டுப்பாடு, மகளிர் எல்லோர்க்கும் வேண்டுவதில்லை. மனேயறத்திற்கேற்ற மங்கலமாய், மனேயற மாண்புகளால் கிறைந்திருக்கும் மகளிர்க்கு அக் கட்டுப்பாடு வேண்டுவதில்லை. அவள் மாண்புடையவ ளானல், கணவன்வீடு வறுமையால் வாடினும், அது செல்வம் கொழிக்கும் செழுமனே போல் சிறந்து விளங்கும. கணவன் வளம் அறிந்து, அவன் வருவாய்க்கேற்ப வாழ்க்கை நடத்தும் விழுமிய குணம் வாய்க்கப் பெற்றவள் தன் கணவன்விட்டு வறுமை கண்டு கலங்குவதோ, அது குறித்து அவனே வெறுத்து விடுத்துச் செல்வதோ செய்யாள். கணவனின் வாழ்க்கைத் துனேவியே மனேவி எனும் கருத்துடையளாயின், அவன் செல்வம் தன் செல்வம், அவன் வாழ்வு தன் வாழ்வு, அவன் தாழ்வு தன் தாழ்வு எனக் கருதி அமைந்து இருப்பள். அத்தகையாள் தன் கணவன்விட்டு வறுமை வாழ்வை வெறுப்பதோ,

தன் தாய்விட்டுப் பெருவாழ்வைப் பாராட்டுவதோ செய். யாள். மாருகத் தாய்விட்டுச் செல்வத்தை மதியாது கணவன்விட்டு வறுமை வாழ்வில் இன்பம் காண்பாள் இப்பண்பாட்டினப், பழந்தமிழ்ப் பெண்டிர், பெருமளவில் பெற்றிருந்தனர். -

செல்வம் கொழிக்கும் வீட்டில், அவ்வீட்டார் மகப் பேறின்றி ஆண்டுபல வருந்தி, அரியபல தவம் ஆற்றிய பின்னர் வந்து பிறந்த ஒரே பெண் அவள். அவளே. அவள் பெற்றேர், அன்பு காட்டி, தம் வளத்திற்கேற்ப வளர்த்து வந்தனர். அவள் வளர்ப்பை, நரைதோன்று மளவு முதிர்ந்து, உலகியல் அறிவால் கிரம்பிய, அன்பே

1. தொல். களவு 2.