பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனயற மாட்சி மிக்க மனவி 185

பெருமையுடைத்து; அப்பொருள் சிறிதே யாயினும், அதுவே பேரின்பம் நல்கும் பெரும் பொருளாம் எனக் கருதும் பேருள்ளம் வாய்ந்த அப்பெண், தந்தை தந்த ப்ெரும்பொருளே மறுத்துவிட்டாள். கணவன் வறுமை வாழ்விலேயே இன்பம் கண்டாள். அதை உள்ளம் கிறைந்த நல்வாழ்வாக மதித்து மகிழ்ந்தாள். பெண்ணின் பேரறிவு கண்டு மகிழ்ந்து பாராட்டினுள் அப்பெண்ணின் தாய் :

‘ பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்

விரிகதிர்ப் பொன்கலத்து ஒருகை ஏங்திப், புடைப்பின் சுற்றும் பூங்தலைச் சிறுகோல் உண் என்று ஒக்குபு புடைப்பத், தெண்ணிர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத், தத்துற்று அரிகரைக் கூந்தல் செம்முது செவிலியர், பரீஇ மெலிங்தொழியப், பங்தர் ஓடி ஏவல் மறுக்கும் சிறுவிளையாட்டி, அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்!. கொண்ட கொழுகன் குடி வறன் உற்றெனக், கொடுத்த தங்தை கொழும் சோறு உள்ளாள், ஒழுகுநீர் நுணங்கு அறல் போலப் - பொழுது மறுத்து உண்ணும் சிறுமதுகையளே.'1

அவன் இல்லையேல் அழகு இல்லை :

உயர்ந்த காதலும் உள்ளன்பும் உடைய மகளிர், தாமும் தம் உடைமையும் தம் கணவர்க்கே உரியவாம்

1. நற்றினே : 1.10. போதனர். - -

பிரசம்-தேன். விரிகதிர் - ஒளிவீசும், ஒக்குபு - ஒச்சி. புடைக்க. அடிக்க. அரி-பரல்கள். தத்துற்று-குதித்து ஓடி, அரிதரை-சிறுகரை, செம் தமுது செவிலி-அறிவால் முதிர்ந்த செவிலி. பரீஇ-பின்தொடர்ந்து ஓடி. வறன்.வறுமை. கொழும் சோறு-பெருஞ்செல்வம். உள்ளாள் - மதியாள். நுணங்கு அறல்-நுண்ணிய மணல். மேடும் பள்ளமுமாகத் தோன்றும் மணல். மதுகையள்-உள்ள உறுதி உடையாள்.

12