பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 நற்றிணை

Gr6 எண்ணுவர். தம் இயற்கை எழிலும், அதை ஆடை அணிகளால் மிகுதிப்படுத்திக் காட்டும் செயற்கை அழகும் அவன் கண்டு மகிழவே எனக் கருதுவர். அவ்வெண்ணம் அவர் உயிரோடு ஒன்றுகலந்து விடுவதால், கணவன் தம்மைவிட்டுப் பிரியாது கலந்து வாழும் காலத்தில் தம்மை ஆடையாலும், அணியாலும், மலராலும், மணப் பொருளாலும் அழகு செய்து மகிழ்வதும், அவன் பொருள் தேடல் முதலாம் காரணம் காட்டித் தம்மைப் பிரிங் திருக்கும்போது, அத்தகைய அழகு எதுவும் மேற் கொள்ளாமையும் செய்வர் ஆஅம்மட்டோ அவர் ஆற்ற லுக்கு அப்பாற்பட்டதும், இயற்கை விளேவும் ஆய, தோளின் பெருமையும், துதலின் ஒளியும் தம் இயல்பு கெட்டுத் தளர்ந்தும், குன்றியும் அழகிழந்துபோம்.

கணவன் இல்லாக் காலத்தில், தம்மை அணிசெய்து கொள்ளா அங்கிலேயோடு கின்றுவிடவில்லை; அவன் இல்லாதபோது, இயல்பாகப் பெற்றிருக்கும் தம் அழகை இழந்துவிடவும் துணிந்து முன்வந்தனர். கணவன் மகிழ்தற்கு இல்லாத என் அழகு கெட்டு, பேய் போலும்ே வடிவுடையேனுகுக ’ என வேண்டி, அப்பேய் வடிவு பெற்றாள் ஒரு பெண் ; கடல் கட்ந்து போன கணவன் வருமளவும், அழகு முகம் இழந்து குரங்கு முகம் பெற்று வாழ்ந்தாள் ஒரு பெண் ; என்னே அவள் காதல் உள்ளம்.! .

பொருள் தேடிப்போயிருந்த காதலன், வினை முடித்து மீண்டு வந்துகொண்டிருந்தான். மீள்வோன், தன் வரவை எதிர்நோக்கிக் காத்துக் கிடக்கும் காதலி, வருவதாக வாக்களித்துச் சென்ற காலம் வரவும் காதலன் வந்திலனே’ எனக் கலங்குவள் வினே முடித்து வீடு’ நோக்கி வந்து கொண்டிருப்பதை அவள் அறியின், அவள், கவலை நீங்கி, மகிழ்வள் ; வரவை எதிர் நோக்கி