பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனயற மாட்சி மிக்க மனவி 189

விருப்பதால், உன்னே மறந்து மனையில் விடுத்துச் சென்ற மலே நாடளுகிய உன் கணவன், வினையை விரைவில் முடித்துக் கொண்டு, உன்னே விரும்பி வந்துவிட்டான் போலும் பிரிந்த கணவனைப் பெற்றுப் பெருமை யுற்றனே நீ என்பதை, நின்நெற்றி அழகே நின்று தெரிவிப்பதாகக் கருதுகிறேன்; யான் கருதுவது சரிதானே ?” என வினவி ள்ை. காதலி காண்பார் மகிழும் பேரழகு பெற்று விளங்குவது, அவள் கணவைெடு கூடி வாழும் காலத்தில் மட்டுமே உண்டாம் என்பதை, அக்காலத் தோழியரும் உணர்ந்திருந்தனர் ; என்னே அம்மகளிர் மாண்பு !

கணவன் இருப்பினும் இல்லாவிடினும், அது குறித்துக் கவலைகொள்ளாது, எக்காலத்தும், எடுப்பாக அணிபெய்துகொண்டு, எவரும் காண, எங்கும் திரிவதே நாகரிகமாம் எனக் கருதும் மகளிர்க்குப் பழந்தமிழ் மகளிர் பால் காணலாம் இப்பண்பாடு நல்லறி வூட்டுமாக,

‘ மாமலே நாடன் கயங்தனன் வருஉம்

பெருமை உடையள் என்பது தருமோ தோழி! நின் திருநுதல் கவினே.”

அவன் இல்லா இடத்தில் இன்பம் இல்லை : - பொருள்கள், இன்ப துன்பச் சுவைகளே இயல்பாகவே பெற்றுள்ளன எனினும், அவை அச்சுவை உடையவாதல் அவற்றை நுகர்வாரின் மன நிலைக்கு ஏற்பவே அமையும். ஒருவர்க்கு இன்பமாதல், மற்றாெருவர்க்குத் துன்பமாம் ; ஒருவர்க்குத் துன்பமாய்த் தோன்றும் ஒரு பொருள், மற்றாெருவர்க்கு இன்பமாய்த் தோன்றும், ஒருவர்க்கு, .9 காலத்தே இன்பமாய்த் தோன்றிய ஒரு பொருள், பிறிதொரு காலத்தில், அவருக்கே, துன்பமாய்த்

  - நயந்தனன்-விரும்பி, திருநுதல்-அழகிய நெற்றியின். கவின்-பேரழகு.