பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 - நற்றின.

தோன்றுவதுமுண்டு ; ஒரு பொருளின் சுவையினே நுகர் வார், அதை நுகர்தற் கேற்ற உள்ளமுடைய காலத்தில் மட்டுமே, அஃது.அச்சுவை உடையதாகத் தோன்றும் ; அவரால் அச்சுவையினே அனுபவித்தல் அக்காலத்தில் மட்டுமே இயலும் , அச்சுவையினே நுகரும் மனகிலே இல்லாதபோது, அவருக்கு அப்பொருள் அச்சுவை உடையதாகத் தோன் ருது ; மாருக, அச்சுவையோடு மாறுபட்ட சுவையுடையதாகவே தோன்றும். -

மணந்து, மனேயற வாழ்வு கொண்ட மகளிர்க்குக், கணவனைப் பிரியாது ஒன்று கூடி வாழும் வாழ்வே, மனம் நிறை வாழ்வாம் ; அவ்வாழ்வினும் இன்பம் மிகுந்த ஒரு பொருள், உலகில் வேறு உடையதாக அவருக்குத் தோன்றாது. அக்காலத்தில் அவர் உள்ளம், இன்ப வெள்ளத்தால் நிறைந்து விடுமாதலின், அங்கிலையில் அவர்கள் காணும் ஒவ்வொரு காட்சியும், கேட்கும் ஒவ்வொரு ஒலியும் இன்பம் கிறைந்து வரத் தோன்றும். யாதேனும் ஒரு காரணத்தால், கணவைேடு கூடிவாழும்: வாழ்வு இல்லாகிவிடின், அப்போது, அவர் வாழ்வில் இன்பம் மறைந்துவிடும் ; அவர் உள்ளத்தில் இன்பம் அழிந்துவிடும், அவர் உள்ளத்தில் இன்ப ஊற்று அடை பட்டுவிடும் துன்ப வெள்ளம் பெருக்கெடுத்தோடும் ; அங்கிலேயில் எதையும் அத்துன்பக் கண்கொண்டே காணத்தலைப்படுவர் மகிழ்ந்து வாழ்வாரைக் காணினும் அவர் துன்பம் பன்மடங்காம் ; மகிழ்ந்திருப்பார்மீதும், அவர்க்கு மகிழ்ச்சி தரும் பொருள்மீதும் கடுங்கோபம் கொள்வர். இது மகளிர் மன இயல்பு. . . . . ... . .”

வேனிற்காலம், மக்கள் மகிழ்ந்து வாழும் காலம் , மக்கள் மகிழும் வண்ணம் இயற்கையின் எழில் விளங்கும் காலம் : அக்கால இன்பத்தைக் கணவனும் மனேவியு