பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனையற மாட்சி மிக்க மனைவி 191

மாய்க் கூடியிருந்து அனுபவிப்பர் மக்கள். பொருள் தேடிப் போன ஒரு காதலன், அவ் வேனிற்காலம் தொடங்குவதற்கு முன்பே வந்து விடுவதாக வாக்குறுதி யளித்துச் சென்றிருந்தான் ; சென்று திங்கள் பல ஆயின ; அவ்விளவேனிற் பருவமும் வந்துவிட்டது ; ஆல்ை அவன் வந்திலன் ; காதலன் வந்துவிடுவன் எனும் நம்பிக்கையால் வீட்டினகத்தே அடைபட்டுக் கிடப்பாள் காதுகளில், இளவேனிற்பருவ வரவுகண்டு மகிழ்ந்து கூவும் குயிலின் குரல் வந்துபுகுந்தது ; அக் குரல், கணவன் வாராமையால் கல்ங்கியிருக்கும் அவள் துன்பத்தை மேலும் அதிக மாக்கிற்று : பன்னெடும் காலத்திற்கு முன்னே உண்டாகி, அதுகாறும் ஆருதிருந்த பழம் புண்ணில், கூரிய வேற்படையைப் பாய்ச்சிற்ை போலும் பெருந்துன்பத்தைத் தந்தது அக்குரல் , வெளியே வந்து ஊர்ப்புறத்தே ஒடும் ஆற்றை நோக்கி ஞள் ; பளிங்குபோல் தெளிந்த நீர் கிறைந்தோடும் காட்சி யையும், அந்நீரில், காதலனும் காதலியுமாய் இணைந்து கின்று ஆடுவார் அழகையும் கண்டாள். குயிலின் குரல் கேட்டுத் துயர் உற்ற அவள் உள்ளம், ஆற்றுக் காட்சி களால் மேலும் துயர் உற்றது ; தெருவை நோக்கினுள் : மிாலேக் காலத்தில் மகளிர் சூடிக்கொள்வதற்கேற்ற, குருக்கத்தி மலரும் சண்பக மலரும் விரவித் தொடுக்கப் பெற்ற கதம்ப மாலேயை, மலர்மகள் விற்றுவருவதைக் கண்டாள்; அவளும், அவள் வட்டிலில் வண்டுகள் சூழக் கிடக்கும் மாலையும், அம் மாலையை விலேகூறி விற்கும் அவள் குரலும் பெருந்துயர் தந்தன ; குயிலினும் s'; ஆற்றினும் கொடியவள்போல் தோன்றிள்ை அம் மலர் * மகள். r

குயிலின் குரல் கேட்டு மகிழ்ந்தவள் அவள் ; அக் குரல் கேட்காதா என ஏங்கியிருந்தவள் அவள், இப்